கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தித்திக் ஆபரேஷன்.. காணாமல் போன 3 சிறுமிகள்.. 8 மணி நேரத்தில் மீட்பு.. பாராட்டு மழையில் போலீஸ் !

Google Oneindia Tamil News

கடலூர் : கடலூர் மாவட்டம் அருகே, காணாமல் போன சிறுமிகளை, அதிவிரைவாக செயல்பட்டு 8 மணி நேரத்தில் மீட் போலீசாருக்கு, காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு சேர்ந்த 3 சிறுமிகள், அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர். நேற்று மாலை அவரது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த மாணவிகள், திடீரென்று மாயமாகினர்.

காணவில்லை

காணவில்லை

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் சிறுமிகள் கிடைக்கவில்லை. இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர்கள், உடனடியாக கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் என பலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், 3 சிறுமிகளை உடனடியாக கண்டுபிடிக்குமாறு போலீசாருக்கு அதிரடியாக உத்தரவிட்டார்
இதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் களமிறங்கிய போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா உள்ளிட்டவர்களை ஆய்வு மேற்கொண்டனர். 3 சிறுமிகள் காணாமல் போன போது, சந்தேகப்படுபடியான வாகனங்கள் ஏதேனும் சென்றதா? என்பது குறித்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.

 3 பேர்

3 பேர்

அப்போது மாணவிகள் காணாமல் சென்ற நேரத்தில் அரசு பேருந்து ஒன்று சென்றைதைக் கண்ட போலீசார், உடனடியாக அந்தப் பேருந்து நடத்துனரிடம் விசாரணை நடத்தியபோது துப்பு கிடைத்தது. கடலூர் முதுநகரிலிருந்து திருப்பாதிரிப்புலியூர் பகுதிக்கு மூன்று சிறுமிகள் பேருந்தில் ஏறிச் சென்றதும், குறிஞ்சிப்பாடி அடுத்த கொத்தவாச்சேரி என்ற பகுதியில் இறங்கியதும் தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் உடனடியாக கொத்தவாச்சேரி கிராமத்திற்கு சென்று, அந்த பகுதியில் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு இருந்த வீட்டில், மூன்று மாணவிகள் புதிதாக வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

3 சிறுமிகள்

3 சிறுமிகள்

இதனை அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 3 சிறுமிகள் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மூன்று சிறுமிகளையும் போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து 3 சிறுமிகளை மீட்டு அவர்களது பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் பெற்றோர்களிடம் சொல்லாமல் எங்கும் செல்லக்கூடாது. பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என்றும் சிறுமிகளுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.

English summary
Appreciation is pouring in for the police who rescued 3 missing girls near Cuddalore in 8 hours
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X