பானையா.. இலையா.. யாருக்கு கிடைக்கும் வெற்றி.. கணிக்கவே முடியாத இடியாப்ப சிக்கலில் சிதம்பரம்
சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள், அதிமுக இடையே கடும் போட்டி எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: கொஞ்சம்கூட உறுதியாக வெற்றி தோல்வியை கணிக்க முடியாத ஒரு தொகுதி உண்டென்றால் அது சிதம்பரம் தொகுதிதான்.. ஸ்டார் வேட்பாளர்கள் இங்கு களமிறங்கியதே இதற்கு முக்கிய காரணம்!
இந்த சிதம்பரம் தொகுதியில்தான் போட்டியிட போகிறேன், வேட்பாளராகவும் நானே களம் இறங்க போகிறேன் என்று திருமாவளவன் கடந்த வருடமே சொல்லிவிட்டார். இதனால் சிதம்பரம் தொகுதி கேட்டு திமுகவை நெருக்கியும் வந்து, கடைசியில் கேட்ட தொகுதியை வாங்கியும் விட்டார்.
விடுதலை சிறுத்தைகள் என்ற பலம் வாய்ந்த கட்சியை தன்னகத்தே வைத்துள்ளார் திருமாவளவன். இவருக்கென்று குறிப்பிட்ட வாக்கு வங்கி தமிழகம் முழுவதும் பரவலாக என்றுமே உள்ளது. அதிலும் சிதம்பரத்தை பொறுத்தவரை 5-வது முறையாக களம் இறங்குகிறார். இதற்கு காரணம், இவரது சொந்த ஊர் இந்த தொகுதியில்தான் வருகிறது.

அதிருப்தி
இங்கு பெரும்பாலும் வன்னியர்கள், தலித், இஸ்லாமியர்கள் வசிப்பதால், சமூக ரீதியான ஓட்டுக்கள் திருமாவளவனுக்கு கிடைக்க நிறைய வாய்ப்பு உள்ளது. தொகுதிக்குள் எட்டிப் பார்க்காத அதிமுக எம்பி மீது மக்களுக்கு உள்ள அதிருப்தி திருமாவளவனுக்கு பலத்தை தருகிறது. மேலும், காடுவெட்டி குருவின் சொந்த ஊர் இந்த தொகுதிக்குள் வருவதால் குருவின் ஆதரவாளர்கள் திருமாவளவனுக்கு ஒத்துழைப்பு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காடுவெட்டி குரு
இதுபோக, திமுகவுக்கு வேல்முருகனின் முழு சப்போர்ட் உள்ளது. இப்போது குருவின் சொந்தங்களும் வேல்முருகனுக்கு ஆதரவு தர.. வேல்முருகனோ.. திருமாவுக்கு ஆதரவு தர.. பெரும்பாலான வன்னியர் வாக்குகளை அப்படியே அள்ளிவிடக்கூடும் என்றும் நம்பப்படுகிறது. இவ்வளவு பிளஸ் இருந்தாலும் திருமாவளவன் தொகுதியில் தாராளம் காட்டுவாரா என தெரியவில்லை.
நடுங்க வைக்கும் புகார்கள்.. இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?

சந்திரசேகர்
ஏனென்றால், அதிமுக சார்பில் சந்திர சேகர் என்பவர் வேட்பாளராக களம் காணுகிறார். இவர் ஒரு புது வேட்பாளர். சாதாரண கவுன்சிலராக இருந்தாலும் பண பலம் எக்கச்சக்கமாக இருக்கிறதாம். அதனால்தான் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

சாதமாகுமா?
வெறும் கூட்டணி பலம், பண பலத்தை நம்பியே களம் இறங்குகிறார். கண்டிப்பாக, அதிமுக, பாமக தொண்டர்களின் ஒத்துழைப்பு இவருக்கு நிறையவே கிடைக்கும் என தெரிகிறது. அதனால் சாதீய ரீதியான ஓட்டுக்கள் என்று விழுந்தால் திருமாவளவனுக்கும், "பசை" உள்ள பார்ட்டி தொகுதிக்குள் சில பல சமாச்சாரங்களை இறக்கினால் அதிமுகவுக்கும் தொகுதி சாதகமாகும் என்று சொல்லப்படுகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications