லோக்சபா தேர்தலை முன்னிட்டு.. கோயிலில் சாமி தரிசனம்.. மனமுருகி வேண்டிய தொல் திருமாளவன்
கடலூர்: லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், கடலூரில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகள் உள்பட மொத்தம் 102 லோக்சபா தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் காலை 6. 30 மணியில் இருந்தே வாக்காளர்கள் காத்திருந்து ஓட்டு போட்டு வருகின்றனர்.

மக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு நாளை முன்னிட்டு சிதம்பரம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கடலூரில் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது அவர் மனமுருகி வேண்டிக்கொண்டார். சிதம்பரம் லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணியில் பாணை சின்னத்தில் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
ஓட்டு போடுவதற்கு முன்னதாக தொல் திருமாவளவன் சாமி தரிசனம் செய்துள்ளார். முன்னதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் அஜித், அமைச்சர் கே என் நேரு, சவுமியா அன்புமணி, ப சிதம்பரம், தமிழிசை சவுந்தரராஜன் என பலரும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்களித்துவிட்டனர்.
இதேபோல் நடிகர் தனுஷ், எல் முருகன், நடிகர் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், நடிகர் பிரபு என திரை நட்சத்திரங்கள் காலை முதலே வாக்குப்பதிவு செய்தனர். நாட்டின் 18 வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். தமிழ்நாட்டில் லோக்சபா தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.


Click it and Unblock the Notifications
