பாமக டி-ஷர்ட் போட்ட 4 பேர்.. அம்பேத்கர் சிலை குண்டு வீச்சு விவகாரத்தில் வன்னி அரசு பரபரப்பு ட்வீட்!
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாமக டி-ஷர்ட் அணிந்த இளைஞர்கள் குண்டு வீசியதாக விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை மீது, மர்ம நபர்கள் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ளனர். மர்ம நபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலைக்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அம்பலவாணன் பேட்டை பொதுமக்கள் மற்றும் விசிக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (21), கிருஷ்ணகுமார் (21), சதீஷ் (29), விஜயராஜ் (22) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அம்பேத்கர் சிலை மீது குண்டு வீச முயன்றவர்கள் பாமக டி-ஷர்ட் அணிந்திருந்ததாகவும், புகாரின் பேரில் 4 பாமகவினரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். மேலும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸையும் விமர்சித்துள்ளார் வன்னியரசு.
இச்சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்துள்ள அம்பலவாணன் பேட்டையில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலை மீது நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் சில சமூகவிரோதிகள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். குறி தவறியதால் சிலைக்கு அருகே விழுந்துள்ளது.

அம்பலவாணன் பேட்டை பொது மக்களும் விடுதலைச்சிறுத்தைகளும் பதறி அடித்துக்கொண்டு பார்த்தபோது, பாமக டி சர்ட் அணிந்திருந்த இளைஞர்கள் டூ வீலரில் கத்திக்கொண்டு போயுள்ளனர். காவல்துறையில் முறையாக புகார் கொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த போலீசார் 4 பாமகவினரை கைது செய்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை சரியான கோணத்தில் விசாரித்து சமூகவிரோதிகளை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும்.
மாற்றம் முன்னேற்றம் என அரசியல் செய்யப்போவதாக பீற்றிக்கொள்ளும் அன்புமணி ராமதாஸ் அவர்களே.. இது தான் உங்களது மாற்றம் முன்னேற்றமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் வன்னி அரசு.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications