கடலூரில் விஜய்யின் விஸ்வரூபம்: ஆடிப்போன திமுக, அதிமுக கோட்டை! சீமான் வீசும் வலையில் நடக்குமா அதிசயம்
கடலூர்: தேர்தல் நெருங்குகிறது.. ஒவ்வொரு தொகுதியிலும் களப்பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.. அந்த வகையில் கடலூர் மாவட்டமும் படுபிஸியாகி விட்டது.. பல முக்கிய தலைவர்கள் இந்த மாவட்டத்தை வட்டமடித்து வருகிறார்கள்.. அந்த தொகுதி நிலவரத்தை இங்கே நாம் சுருக்கமாக பார்ப்போம்.
தமிழகத்தின் மத்திய மண்டலத்தில் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக கடலூர் கருதப்படுகிறது.. இந்த மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டத்தின் அரசியல் வரலாற்றை பார்த்தால், பெரும்பாலும் திமுக மற்றும் அதிமுக ஆகிய 2 கட்சிகள்தான் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன.. இந்த 2 கட்சிகளுக்கு இடையிலான போர்க்களமாகவே கடலூர் இருந்து வந்துள்ளது.
ஆனால் வரப்போகும் 2026 சட்டமன்றத் தேர்தல் களமானது, இதுவரை இல்லாத ஒரு புதிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. காரணம், பாரம்பரியக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு போட்டியாக, நடிகர் விஜய்யின் தவெகவும் வந்துவிட்டது.. போதாக்குறைக்கு சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை மிகப்பலமாக உருவெடுத்துள்ளன.
திமுக செல்வாக்கு
ஆளும் கட்சியான திமுகவை எடுத்துக்கொண்டால், கடலூர் மாவட்டத்தில் அக்கட்சிக்கென எப்போதுமே ஒரு நிலையான வாக்கு வங்கி உள்ளது. அமைச்சர்கள் மட்டத்தில் நிலவும் செல்வாக்கு அவர்களுக்கு சாதகமாக இருந்தாலும், சில உள்ளூர் அதிருப்திகளும் இருக்கத்தான் செய்கின்றன..
குறிப்பாக, நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்ட விவகாரம், கடலூர் சிப்காட் பகுதியின் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மீன்பிடித்தொழிலில் நிலவும் சிக்கல்கள் போன்றவையெல்லாம் திமுகவிற்கு சவாலாக மாறியுள்ளன. அரசு அறிவித்துள்ள நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்தாலும், நிலம் சார்ந்த போராட்டங்கள் திமுகவின் வாக்கு வங்கியில் சிறு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை, கடலூர் மாவட்டம் அக்கட்சிக்கு ஒரு வலுவான தளம் என்றே சொல்லலாம்.. குறிப்பாக பிரிந்த அணிகள் இணைந்த பிறகு, இங்குள்ள அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி அரசியல்
அதுமட்டுமல்ல, கடலூர் மாவட்டத்தில் கணிசமாக உள்ள வன்னியர் சமூக வாக்குகளை பெற பாமகவுடன் கூட்டணி அமைப்பது அதிமுகவிற்கு அவசியமாகிறது. எனவேதான், எடப்பாடி பழனிசாமியின் நேரடிப் பார்வையில் கடலூர் மாவட்டத்திற்கான தேர்தல் பணிகள் ஏற்கனவே வேகம் எடுத்துள்ளன.
இந்த தேர்தலில் மிகப்பெரிய டர்னிங் பாயிண்ட்டாக பார்க்கப்படுவது தமிழக வெற்றி கழகம். நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினாலும், அதன் தாக்கம் அண்டை மாவட்டமான கடலூரில் மிக அதிகமாக உள்ளது.
கடலூரில் உள்ள 9 தொகுதிகளிலும் விஜய் ரசிகர் மன்றங்கள் கிளை அமைப்புகளாக மாற்றப்பட்டு, களப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விஜய் மீதான ஈர்ப்பு அதிகமாக உள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய 2கட்சிகளின் மீதும் அதிருப்தியில் உள்ள பொதுவான வாக்குகளை தவெக ஈர்க்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
சீமானின் வீரியமிக்க பேச்சு
நாம் தமிழர் கட்சியையும் சொல்லியாக வேண்டும.. கடந்த 10 வருடத்தில் தனது வாக்கு சதவீதத்தை சீராக உயர்த்தி வந்துள்ளது சீமானின் கட்சி. கடலூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்கள் மற்றும் விவசாயக் குடும்பங்களில் நாம் தமிழர் கட்சியின் மண்ணின் மைந்தர் அரசியல் ஆழமாக வேரூன்றியுள்ளது.
சீமானின் அனல் பறக்கும் பேச்சுகள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளதால், இந்த கட்சி பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது. இதனால் கடலூரில் ஒரு பலமான 4 முனைப் போட்டி உருவாகியுள்ளது.
கடைசியில் கடலூர் யாருக்கு
ஆனால், விசிகவின் தாக்கம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் போன்ற தொகுதிகளில் மிக அதிகமாக உள்ளது. எனவே திருமாவளவனின் செல்வாக்கு இன்றும் கடலூரின் தலித் வாக்கு வங்கியை தக்கவைத்துள்ளது.
இப்படி சாதி ரீதியான வாக்குகள், புதிய தலைமுறை அரசியல் , ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி என அனைத்தும் கலந்து கடலூர் மாவட்ட தேர்தல் களத்தை ஒரு பெரும் விவாத பொருளாக இன்று மாற்றியுள்ளன. கடைசியில் கடலூர் யாருக்கு கிடைக்கும் என தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!
-
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications