மாப்பிள்ளையை தாக்கி.. பெண்ணை இழுத்து சென்ற காதலன்.. விருதாச்சலத்தில் பரபரப்பு.. மறியல்!
Recommended Video
விருதாச்சலம்: மாப்பிள்ளையை சரமாரியாக தாக்கிவிட்டு, நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த பெண்ணை மாற்று சமூகத்தை சேர்ந்த காதலன் இழுத்து சென்றுவிட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள், சாலைமறியலில் ஈடுபட்டு வருவதால் விருதாச்சலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
விருத்தாசலம் அடுத்த மணக் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் இளம்பாரதி. திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் பூண்டியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த வித்யா என்பவரை காதலித்து வந்தார். இருவருமே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். வித்யா இப்போது, சென்னையில் நர்ஸ்-ஆக வேலை பார்க்கிறார். காதலர்கள் இருவருமே வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

விருதாச்சலம்
இந்நிலையில் வித்யாவுக்கு வீட்டில் ஒரு மாப்பிள்ளை பார்த்து முடித்தனர். அதன்படி, அவருடன் நிச்சயதார்த்தமும் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக வித்யாவையும், மாப்பிள்ளையையும் அழைத்து கொண்டு, உளுந்தூர்பேட்டையில் இறங்கி விருத்தாசலம் வருவதற்காக குடும்பத்தினர் காத்திருந்தனர்.

வித்யா
விஷயத்தை கேள்விப்பட்டு, அப்போது, அங்கே வந்த, காதலன் இளம் பாரதி, மாப்பிள்ளையை சரமாரியாக தாக்கி கீழே சாய்த்துவிட்டு, வித்யாவை தன்னுடன் இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் ஆலடி ஸ்டேஷனில் புகார் அளிக்க சென்றுள்ளனர். ஆனால் சம்பவம் நடந்தது உளுந்தூர்பேட்டை என்பதால் புகாரை ஏற்க போலீஸ் தரப்பில் மறுத்ததாக கூறப்படுகிறது.

சாலைமறியல்
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொட்டாரக்குப்பம் கிராமம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ஒருதலைபட்சமாக செயல்படும் ஆலடி ஸ்டேஷனில் வேலை பார்க்கும் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்ணை மீட்டு தர கோரியும் முழக்கமிட்டனர்.

சமாதானம்
மேலும், "ஆதலால் காதல் செய்வீர்" என்ற அமைப்பின் மூலம் செயல்படும் செல்வ விநாயகத்தை கைது செய்ய கோரியும், நாடக காதல் என்ற பெயரில் குறிப்பிட்ட சமூகத்தின் பெண்களை வாழ்க்கையை சீரழிப்பதற்கு தூண்டுதலாக செயல்படும் சிறுத்தை கட்சியை தடை செய்ய கோரியும் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகலறிந்து வந்த போலீசார் உறவினர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, பெண்ணை மீட்டுத் தருவதாக உறுதி அளித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது.
தற்போதும், சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் குவிந்து வருவதால் அங்க பெரும் பதட்டம் நிலவுகிறது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications