நீங்க மத்திய அமைச்சரா இருந்தப்போ நான் ஸ்டூடண்ட் சார்! அன்புமணியை கூல் செய்த டிஐஜி ஜியாவுல் ஹக்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: என்.எல்.சி.க்கு எதிராக பாமக நடத்திய போராட்டத்தால் கடலூர் மாவட்டமே நேற்று ஸ்தம்பித்த நிலையில், நிலைமை இன்னும் மோசமாகாமல் பார்த்துக் கொண்டதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார் விழுப்புரம் சரக டிஐஜி ஜியாவுல் ஹக்.

பாமக தொண்டர்களை வெறுமனே தடியடியால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்த அவர், நேராக அன்புமணி ராமதாஸை சந்தித்து அவரை கூல் செய்து நிலைமையை இயல்பு நிலைக்கு திருப்பியிருக்கிறார்.

Villupuram Range DIG Ziaul Haq has played an important role in Pmk protest drop

என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராக கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பாமக நேற்று நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் மக்களின் இயல்பு பெரும் பாதிப்பிற்குள்ளானது. காவல்துறையினர் பாமகவினர் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நேரம் செல்லச் செல்ல நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டே போனது. இந்நிலையில் விழுப்புரம் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் சாதுர்யமாக இந்த விவகாரத்தை கையாண்டார். அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டு அவரை அடைத்து வைக்கப்பட்டிருந்த மண்டபத்துக்கு சென்ற ஜியாவுல் ஹக், நீங்க மத்திய அமைச்சரா இருந்தப்போ நான் ஸ்டூடண்ட் சார் என எடுத்த எடுப்பிலேயே அவரை கூல் செய்தார்.

நேரமாச்சே லஞ்ச் சாப்பிடலாம் சார், என டிஐஜி ஜியாவுல் ஹக் வாஞ்சையுடன் கேட்க அதெல்லாம் வேண்டாம்ங்க நான் போகிற வழியில் சாப்பிட்டுக் கொள்கிறேன் என லஞ்ச் சாப்பிட மறுத்தார் அன்புமணி. மேலும், தங்கள் தொண்டர்கள் மீது தவறில்லை என்றும் வெளியூரிலிருந்து அழைத்து வரப்பட்ட காவலர்கள் தான் முதலில் தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள் எனவும் அன்புமணி குற்றஞ்சாட்டினார்.

Villupuram Range DIG Ziaul Haq has played an important role in Pmk protest drop

அதனை ஆமோதித்து ஏற்றுக்கொண்ட ஜியாவுல் ஹக் அன்புமணியிடம் மேற்கொண்டு வாதம் செய்யவில்லை. அவர் போக்கிலேயே போய் அவரை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருணிடம் வாட்ஸ் அப் காலில் பேச வைத்தார். அப்போது என்னை வேண்டுமானால் கைது செய்து கொள்ளுங்கள், எங்கள் தொண்டர்கள் மீது கைவைக்கக் கூடாது என ஏடிஜிபி அருணிடம் அன்புமணி கேட்டுக்கொண்டார்.

மேற்கொண்டு பேசிய டிஐஜி ஜியாவுல் ஹக் தனது தந்தையும் ஒரு விவசாயி தான் என்றும் விவசாயிகளின் நிலை புரிவதாகவும் கூறி அன்புமணியை ஆஃப் செய்தார். இதையடுத்தே பாமகவினர் கலைந்து சென்றதோடு பதற்றமும் தணிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+