கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு என்ன காரணம்? பரபர பிரேத பரிசோதனை ரிப்போர்ட்!
கடலூர்: கள்ளக்குறிச்சியில் மாணவி பலியான விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் பிரேத பரிசோதனை அறிக்கை விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி பலியான சம்பவம் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ள நிலையில், இது கொலை என்று மாணவியின் பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

போராட்டம்
அங்கு ஏற்கனவே மாணவிகள் பலர் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் புகார் வைக்கப்பட்டள்ளது. இந்த நிலையில்தான் மாணவிக்கு நீதி வேண்டி பள்ளி வளாகம் முன் இன்று மக்கள் போராட்டம் செய்தனர்.
பள்ளியை மொத்தமாக மூட வேண்டும் என்று கூறி போராட்டம் செய்தனர். அதோடு தாளாளரை கைது செய்ய வேண்டும். உடனே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.

கலவரம்
இந்த போராட்டம் இன்று கலவரத்தில் முடிந்த நிலையில் பள்ளி பேருந்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்களும் துரத்தியடிக்கப்பட்டன.பள்ளி மாணவி மரணத்துக்கு காரணமானோரை தண்டிக்க கோரி ஆயிரக்கணக்கான மக்கள் களமிறங்கி போராட்டம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், வன்முறையில் ஈடுபட்டோரை விரட்ட வானத்தை நோக்கி போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

போராட்டக்காரர்கள்
இந்த நிலையில் வன்முறையில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். அங்கு தற்போது 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கு நடந்த கலவரம் காரணமாக தற்போது கள்ளக்குறிச்சியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் இது தொடர்பாக வெளியாகி இருக்கும் பிரேத பரிசோதனை அறிக்கை விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரேத பரிசோதனை
அந்த மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கையில், அவருக்கு தலையில், மூக்கில், தோள்பட்டையில் அடிபட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் அவரின் ஸ்கூல் யுனிபார்மில் மேலாடை, கால் சட்டை, மேல் மற்றும் கீழ் உள்ளாடை இரண்டிலும் ரத்த கரை இருந்ததாக கூறப்பட்டுள்ளது. மார்பு பகுதி, கை பகுதி ஆகியவையும் உடைந்து இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இடது தலை பகுதி உடைந்து இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காயங்கள்
அவரின் உடலில் இருந்த காயங்கள் எல்லாம் புதிய காயங்கள்தான். பழையது கிடையாது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிக அளவில் ரத்தம் வெளியேறியது, காயங்கள் காரணமாக ஏற்பட்ட ஷாக் ஆகியவைதான் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று அறிக்கையின் இறுதியில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் கெமிக்கல் சோதனைக்கு பின்பே முழுமையான முடிவுகள் வரும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications