Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரைவர் பக்கத்தில் உட்காரும் சலோமி.. பஸ்ஸில் லவ் பாட்டுதான்.. தீவைத்து எரித்த கடலூர் காதல் டார்ச்சர்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: டிரைவர் பக்கத்தில்தான் உட்கார்ந்து கொள்வாராம் சலோனி... லவ் பாட்டுகளை பஸ்ஸில் போடவும், அப்படியே ஒரு தலைக்காதல் கண்டக்டருக்கு பற்றி கொள்ள.. கடைசியில் சலோமியே பற்றி எரிந்து போகும் நிலைக்கு வந்துவிட்டது!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் ஜான்விக்டர்.. இவர் ஒரு ராணுவவீரர்... மேற்கு வங்காளத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவிதான் சலோமி, 25 வயதாகிறது.. 2 குழந்தைகளும் உள்ளனர். வடலூரில் தனியார் வீடு கட்டும் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்... இதனால் டெய்லி நெய்வேலியில் இருந்து தனியார் பஸ்ஸில்தான் வேலைக்கு போவது வழக்கம்.

டிரைவர்

டிரைவர்

அந்த தனியார் பஸ் கண்டக்டர்தான் சுந்தரமூர்த்தி... கல்யாணம் ஆகவில்லை.. எப்பவுமே பஸ்ஸில் ஏறியதும் டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில்தான் உட்கார்ந்து கொள்வாராம்.. அதனால் அடிக்கடி கண்டக்டரின் நடமாட்டம் டிரைவர் பக்கமே இருந்துள்ளது.. பிரைவேட் பஸ் என்பதால் பாடல்களை போடுவார்கள்.. இந்த பாட்டு போடும் வேலை சுந்தரமூர்த்தி செய்துள்ளார்.. எல்லாமே லவ் பாட்டுதான்.

சலோமி

சலோமி

லவ் பாட்டை போட்டே சலோமியிடம் நைசாக பேச்சு தந்துள்ளார்.. நாளடைவில் ஒருவருக்காருவர் நெருங்கி சகஜமாக பேசும் அளவுக்கு வந்துவிட்டனர். சலோமி சாதாரணமாக சிரித்து பேசினாலும், சுந்தரமூர்த்தி குணம் குரங்காகிவிட்டது. சுந்தரமூர்த்திக்கு சலோமி என்றில்லை.. பஸ்ஸில் வேறு சில பெண்களிடமும் இப்படித்தான் பாட்டை போட்டே தன் வலையில் விழ வைக்க முயற்சித்திருக்கிறார். ஒருமுறை இப்படி சேட்டை பண்ணியதால், நிர்வாகத்திற்கு புகாரும் போயுள்ளது.

ஆத்திரம்

ஆத்திரம்

அப்போது, சுந்தர மூர்த்தியை வேலையை விட்டுக்கூட அனுப்பிவிட்டார்களாம். இதனால் 8 மாசமாக சுந்தரமூர்த்திக்கு வேலை இல்லை.. இருந்தாலும் சலோமியை பார்க்காமல் இருக்க முடியாமல், பஸ் ஸ்டாண்டையே சுற்றி சுற்றி வந்துள்ளார்... கண்டக்டரா இருக்கும்போது பழகியதால், இப்போது சுந்தரமூர்த்தியிடம் பேச்சை குறைத்துள்ளார் சலோமி. இதுதான் சுந்தரமூர்த்திக்கு ஆத்திரத்தை தந்துள்ளது.. தன்னுடைய காதலை வெளிப்படுத்தி உள்ளார்.

பெட்ரோல்

பெட்ரோல்

இதனால் மிரண்டு போன சலோமி, 2 குழந்தைகள் தனக்கு இருப்பதால், இனி இப்படி தன்னிடம் பேச வேண்டாம் என எச்சரித்துள்ளார்.. சுந்தரமூர்த்தி விடவில்லை.. சலோமியை பழிவாங்க முடிவு செய்தார்.. அதனால் ஒரு கூல்டிரிங்ஸ் பாட்டிலில் பெட்ரோலை வாங்கி கொண்டு, நேராக சலோமி வேலை பார்க்கும் கடைக்கு போனார்.. தன்னுடைய சீட்டில் உட்கார்ந்து சலோமி நேற்று வேலை பார்த்து கொண்டிருந்தார்.

இங்கே ஏன் வந்தீங்க?

இங்கே ஏன் வந்தீங்க?

ஆனால், மற்ற ஊழியர்களும் அங்கு இருந்ததால், சுந்தரமூர்த்திக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உறவினர் வந்திருப்பதாக சொல்லி சலோமியை வெளியே அழைத்துள்ளார். வேறு யாரோ வந்திருப்பதாக நினைத்து சலோமியும் வெளியே வந்தார்.. சுந்தரமூர்த்தியை பார்த்ததும் அதிர்ந்தார்.. "இங்க என்ன பண்றீங்க? ஏன் இங்கே வந்தீங்க" என்று கேட்டதுமே பெட்ரோலை தூக்கி சலோமி மீது ஊற்றி தீ வைத்து பற்ற வைத்துவிட்டார்.

சிகிச்சை

சிகிச்சை

வலி தாங்காமல் சலோமி அலறி துடிக்கவும், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்... உடனே சலோமியை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான முறையில் சிகிச்சை நடக்கிறது.. இதனிடையே தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பி ஓட முயன்ற சுந்தரமூர்த்தியை பொதுமக்கள் பிடித்து வடலூர் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.. சுந்தரமூர்த்தியிடம் விசாரணை நடக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+