டிச-8 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்துச்செய்யக்கோரி வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
தமிழில் படித்தவர்களுக்கே முன்னுரிமை என அறிவித்த நிலையில் தமிழ் தெரியாத வட மாநிலத்தவர் விண்ணப்பித்துள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை என அறிவித்துள்ளதால், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளுக்காக 2019 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரத்தை சேர்ந்த சிவராமன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், "பொறியியல் படிப்பு முடித்து ஆசிரியர் பணி மீதான ஆர்வத்தால் விழுப்புரத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் விரிவுரையாளராக தற்காலிகமாக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 2017-18 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, அந்த தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, புதிய தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடுமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் 2019 ஆம் ஆண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பானை வெளியிட்டுள்ளது, பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான அந்த தேர்வு நாளை (டிசம்பர் 8) தொடங்கி வரும் 12 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளதால், அதற்கான ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கல்லூரிக்கான விரிவுரையாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் மொழிப்பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் விதிமுறை உள்ளது. அவ்வாறு தமிழ் படிக்காதவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற தேர்வில் பணி கிடைத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் மொழிப் பாடத்தில் தேர்ச்சிப்பெற வேண்டுமென விதிகள் வகுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் டிசம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியிடங்களில் 100% சதவீதம் தமிழர்களையே நியமிக்கும் வகையில் புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது. நாளை தொடங்கவுள்ள தமிழ் தெரியாத வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் விண்ணப்பித்து இருப்பதால், கடந்து 2019 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது மனு குறித்து தமிழ்நாடு அரசு, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications