டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியர்களுக்கு மறக்க முடியாத மே.. உலகத்திலேயே அதிகபட்ச உயிரிழப்பு.. டெல்லி, உத்தரகாண்ட் மிக மோசம்!

Google Oneindia Tamil News

டெல்லி: மே மாதத்தில் மட்டும் இந்தியாவில் 1,19,183 இறப்புகள் பதிவாகியுள்ளன. டெல்லி, உத்தரகாண்ட் மாநிலங்களில் மிக மோசமாக பாதிக்கப்ட்டுள்ளன.

Recommended Video

    உலகை அச்சுறுத்தும் Vietnam-ல் பரவும் உருமாறிய கொரோனா.. இதுவரை தோன்றியதிலேயே மோசமானது.. ஏன்?

    நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக ஆட்டம் போட்ட கொரோனா வைரஸ் தற்போது ஓரளவு அடங்கி இருக்கிறது.

    சி.டி. மணி, மன்னார்குடி பேராசிரியர்...9 ஆண்டுகளாக நீடிக்கும் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு மர்மங்கள்சி.டி. மணி, மன்னார்குடி பேராசிரியர்...9 ஆண்டுகளாக நீடிக்கும் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு மர்மங்கள்

    பல மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 1,50,000-க்கும் கீழே குறைந்துள்ளது. 4,000-க்கும் மேல் சென்ற தினசரி உயிரிழப்புகளும் சற்று குறைந்துள்ளது.

    மறக்க முடியாத மே

    மறக்க முடியாத மே

    இந்தியாவில் இந்த வருடத்தின் ஏப்ரல், மே மாதங்களை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. இந்த இரண்டு மாதத்தில்தான் தொற்று உச்சம் தொட்டது. அதுவும் மே மாதத்தை கருப்பு மாதம் என்று கூறும் அளவுக்கு உயிரிழப்பு உச்சத்தில் இருந்தது. மே மாதத்தில் ஒவ்வொரு நாளும் இந்தியா 3,400-க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவு செய்தது. குறைந்தது 13 நாட்களுக்கு தினமும் உயிரிழப்பு எண்ணிக்கை 4,000 க்கும் அதிகமாக இருந்தது.

     மகாராஷ்டிரா டாப்

    மகாராஷ்டிரா டாப்

    மே 19-ம் தேதி மட்டும் இந்தியா 4,529 உயிரிழப்புகளை பதிவுசெய்தது. கொரோனா வைரஸ் தோன்றிய காலத்தில் இருந்து உலகம் முழுவதுமான அதிகபட்ச ஒருநாள் உயிரிழப்பு இதுவாகும். மே மாதத்தில் மட்டும் இந்தியாவில் 1,19,183 இறப்புகள் பதிவாகின. உலகத்திலேயே ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும். மே மாதம் அதிக உயிரிழப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

    தமிழகம் 3-ம் இடம்

    தமிழகம் 3-ம் இடம்

    இங்கு 26,531 உயிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இது இன்றுவரை அந்த மாநிலத்தில் நடந்த அனைத்து இறப்புக்களில் 28% ஆகும். கர்நாடகா 3,632(47%) இறப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகம் 10,186(42%) உயிரிழப்புகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தலைநகர் டெல்லி மே மாதத்தில் 8,090 இறப்புகளை பதிவு செய்து 4-வது இடத்தை பிடித்துள்ளது.

    டெல்லி மிக மோசம்

    டெல்லி மிக மோசம்

    டெல்லி மே மாதத்தில் 2.9% கோவிட் இறப்பு விகிதத்தை (சி.எஃப்.ஆர்) பதிவு செய்தது. இது அந்த மாதத்தில் தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு (1.3%) அதிகமாகும். மற்ற மாநிலங்களிலும் மே மாதத்தில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. பஞ்சாப் (2.8%) மற்றும் உத்தரகண்ட் (2.7%) ஆகிய இரு மடங்கிற்கும் அதிகமான இறப்புகளைப் பதிவு செய்துள்ளன.

    மகாகும்பமேளா உத்தரகாண்ட்

    மகாகும்பமேளா உத்தரகாண்ட்

    அதாவது 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முந்தைய மாதங்களில் பதிவான மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையை விட மே மாதத்தில் அதிக இறப்புகளைப் பதிவு செய்துள்ளன. அஸாமில் மொத்த உயிரிழப்பான 3,365 பேரில் 2,058(61%) பேர் மே மாதத்தில் மட்டும் இறந்துள்ளனர். மகாகும்பமேளா நடந்த உத்தரகண்ட் மாநிலத்தில் 59% பேரும், கோவா மாநிலத்தில் 56% பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 53% பேரும், பீகாரில் 50% க்கும் அதிகமானவர்களும் மே மாதத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.

    English summary
    In May alone, 1,19,183 deaths were reported in India. The worst affected states are Delhi and Uttarakhand
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X