Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் 1,753பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப படாமல் உள்ளன:நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாட்டில் 1,753- பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் படாமல் இருப்பதாக மத்திய இணை அமைச்சர் அன்னபூர்னா தேவி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் விழுப்புரம் தொகுதி எம்.பி. யான டி.ரவிக்குமார் நேற்று எழுப்பியிருந்த கேள்வியில், '2020 முதல் 2022 வரை ஆண்டுகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை குறித்தும் நிரப்பட்ட ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் எண்ணிக்கை குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.

1,753 school teacher posts are unfilled in Tamil Nadu: Union Minister Annapurna Devi replies in Parliament

இதற்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி கூறியதாவது:- 2022-23 ஆம் தமிழ் நாட்டில் தமிழ்நாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மொத்த ஆசிரியர் பணியிடங்கள் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 968 எனவும் அதில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 215 இடங்கள் நிரப்பட்டது என்றும் கூறினார். மேலும், இதில், 1,753 பணியிடங்கள் இன்னும் நிரப்ப பட வேண்டியவை எனவும் தெரிவித்தார். இதே எண்ணிக்கை 2021-22 ஆம் கல்வி ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்படவை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 016 என்றும் நிரப்பப்பட்டவை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 182 பணியிடங்கள் என்றும், காலியாக இருந்தவை 5,834 என்றிருந்தது என்றும் தெரிவித்தார்.

பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பதும் அவர் அளித்த பதிலில் தெரியவந்தது. மேலும் 2022-23 ஆம் கல்வி ஆண்டில், குஜராத்தில் 19,963 பணியிடங்களும் மத்தியப் பிரதேசத்தில் 69,667 பணியிடங்களும் உத்தரப் பிரதேசத்தில் 1,26,028 பணி இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன.

1,753 school teacher posts are unfilled in Tamil Nadu: Union Minister Annapurna Devi replies in Parliament

பீகாரில் நாட்டிலேயே அதிகபட்சமாக ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 209 பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களான மேகாலாயா, நாகலாந்து மற்றும் ஒடிசாவில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஒன்று முதல் எட்டாம் வகுப்புக்கான ஆசிரியர் பணியிடங்கள் ஒன்று கூட காலியாக இல்லை எனவும் டெல்லியில் 4 காலியிடங்கள் மட்டுமே இருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+