ஜோ பைடனை வரவழைக்க ரூ.1.24 லட்சம் கோடி செலவு.. அமெரிக்காவில் நிதி பெற தலைவர்களை மகிழ்விக்கிறாரா மோடி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இந்தியாவுக்கு அழைத்து வர பிரதமர் மோடி சுமார் ரூ.1.25 லட்சம் கோடி செலவிடுகிறார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பேத்கரின் பேரனுமான பிரகாஷ் அம்பேத்கர் விமர்சித்துள்ளார்.

இந்தியா தலைமை தாங்கி நடத்தும் ஜி20 மாநாடு டெல்லியில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்களாக நடைபெறும் இந்த ஜி20 மாநாட்டில் பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம், சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுவதாகத் தெரிகிறது.

1 point 24 lakh crore cost of bringing Biden to India, Modi : criticizes Prakash ambedkar

ஜி-20 மாநாடு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமான மூலம் இந்தியா வந்தடைந்தார். அதிபர் ஜோ பைடனை மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார். அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ஜோ பைடன் சந்தித்து பேசினார்.

விண்வெளி ஒத்துழைப்பின் அனைத்துத் துறைகளிலும் புதிய எல்லைகளை அடைவதற்கான ஒரு போக்கை நிர்ணயித்துள்ள தலைவர்கள், தற்போதுள்ள இந்தியா-அமெரிக்க சிவில் விண்வெளி கூட்டுப் பணிக்குழுவின் கீழ் வணிக விண்வெளி ஒத்துழைப்புக்கான பணிக்குழுவை நிறுவுவதற்கான முயற்சிகளை வரவேற்றனர் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பேத்கரின் பேரனுமான பிரகாஷ் அம்பேத்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்க நிறுவனங்களுக்கு ரூ.12,43,98,97,50,000 (ரூ.1.24 லட்சம் கோடி) வழங்க பிரதமர் முன்வந்துள்ளார். இதன் காரணமாகவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஜி20 மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வருவதை தவிர்த்துள்ளார்.

ரஷ்யாவை விட அமெரிக்காவை ஆதரிக்கும் உங்கள் கொள்கை எதற்காக? அமெரிக்காவில் ஊர்வலம் போகவும், சந்திப்புகளை நடத்தவும், அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் தேர்தல் நிதி வாங்கவும் மோடி அமெரிக்க தலைவர்களை மகிழ்விக்கிறாரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் பிரகாஷ் அம்பேத்கர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+