வங்கிக்கணக்கு இருக்கா? இதை முடிச்சிட்டீங்களா? ஆதார் கார்டு எங்கே? சம்பளம் கிடையாதாமே.. அரசு அதிரடி
டெல்லி: 100 நாள் வேலை திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. இதை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தில், கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது... இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
குளங்களை தூர்வாருவது,கால்வாய்களை பராமரிப்பது, அரசுக்கு சொந்தமான காடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது என பல்வேறு அரசு சார்ந்த பணிகளுக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். இந்த திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது.

100 நாள் வேலை திட்டம்: இந்த 100 நாள் பணியாளர்களுக்கு ஊதியமானது, 2 முறைகளில் வழங்கப்பட்டு வந்தது... ஒன்று வங்கிக் கணக்கு அடிப்படையிலும், மற்றொன்று ஆதார் கணக்கு அடிப்படையிலும், ஊதியம் வழங்கப்படுகிறது.. இதனால், வங்கிக் கணக்கின் கீழ், பணியாளர்கள் அளித்த வங்கிக்கணக்கில் பணம் நேரடியாக செலுத்தப்பட்டது.
சுற்றறிக்கை: இந்நிலையில், கடந்த ஜனவரி 30-ம் தேதியன்று, மத்திய ஊரக மேம்பாடு அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும்/யூனியன் பிரதேசங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியிருந்தது.
அதில், 2023, பிப்ரவரி 1ம் தேதி முதல், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஊதியம் பெற, ஆதார் எண்ணை கொண்டு பணம் செலுத்தும் முறைகள் (ABPS -Aadhar Based Payment System) கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்காதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாக அறிவித்திருந்தது.
நாளையே கடைசி: ஆனாலும், மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கிணங்க கால வரம்பு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது... அந்த வகையில் வரும் 31-ம் தேதி அதோவது நாளையே கடைசி தேதியாகும்.. அதனால், வரும் நாளைக்குள் வங்கிக்கணக்கை ஆதார் எண்ணுடன் இணைத்து, இணைக்கப்பட்ட வங்கிக்கிளை அலுவலகத்துக்கு சென்று உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அப்படி செய்யாதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications