இந்தியா முதல் பிரான்ஸ் வரை.. 13 நாடுகளில் 101 டீம்கள்! சர்வதேச போராட்டங்களை ஒருங்கிணைக்க நெட்வொர்க்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் போராட்டங்கள் முதல் இந்தியாவில் இளைஞர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் வரை, பல்வேறு நாடுகளில் நடைபெறும் போராட்டங்களை ஒருங்கிணைக்கவும், அதன் செய்திகளை பரப்பவும் 13 நாடுகளில் உள்ள 101 அமைப்புகள் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

இப்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்து வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா என பல நாடுகளை சொல்லலாம். இதில் சில நாடுகளில் போராட்டம் அமைதியாக நடக்கும் நிலையில், பல நாடுகளில் போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ளன. இதற்கிடையே போராட்டங்களை ஒருங்கிணைக்கவும், அதன் செய்திகளை பரப்பவும் 13 நாடுகளில் உள்ள 101 அமைப்புகள் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது..

Global Protests france India

வெளியான ரிப்போர்ட்

இது குறித்த செய்தியை ஃபாக்ஸ் நியூஸ் வெளியிட்டுள்ளது. இதன் பின்னணியில் கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், மாணவர் குழுக்கள், சமூகநல அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் அடங்கிய சர்வதேச நெட்வொர்க் இருப்பதாக அந்த ரிப்போர்ட் கூறுகிறது. ஃபாக்ஸ் நியூஸ் பத்திரிகையாளர் அஸ்ரா கியூ. நொமானி வெளியிட்ட இந்த ரிப்போர்ட்டில், பல்வேறு நாடுகளில் நடைபெறும் போராட்டங்களுக்கு இடையே உள்ள தொடர்புகளை விளக்கியுள்ளார்.

101 அமைப்புகள்

முன்னதாக, பிரான்சில் மாணவர்கள் நடத்திய போராட்டங்களுடன் தொடர்புடையதாக 50 அமைப்புகள் அடையாளம் காணப்பட்டு இருந்தது. அக்டோபர் 19ஆம் தேதி அந்த எண்ணிக்கை 54 ஆக உயர்ந்த நிலையில், தற்போது 101 அமைப்புகள் அடங்கிய நெட்வொர்க் இருப்பதாக அந்த ரிப்போர்ட் கூறுகிறது. பல்வேறு நாடுகளில் உள்ள இந்த அமைப்புகள் சமூக வலைத்தளங்கள், செய்திகள் மற்றும் அரசியல் பிரசாரங்கள் மூலம் போராட்டங்கள் குறித்த தகவல்களை பரப்புவதாகவும், உள்ளூர் பிரச்சினைகளின் அடிப்படையில் உருவாகும் இயக்கங்களை சர்வதேச அளவில் இணைப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பிரான்ஸை தளமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் அலையன்ஸ் பாரிஸ் என்ற அமைப்பை இந்தியா மற்றும் பிரான்ஸ் போராட்டங்களுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்தும் அமைப்புகளில் ஒன்றாக ஃபாக்ஸ் நியூஸ் சுட்டிக்காட்டியுள்ளது. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பல்வேறு தரப்பினரை கொண்ட இந்த அமைப்பு, பிரான்ஸில் நடைபெறும் போராட்டங்களை ஆதரித்ததுடன், இந்திய இளைஞர்களின் போராட்டங்களையும் அத்தோடு ஒப்பிட்டு இருக்கிறது.

ஒரே போராட்டமாம்

மேலும், சர்வதேச அரசியல் அமைப்பான புரோகிரசிவ் இன்டர்நேஷனல் பிரான்ஸ், ஸ்பெயின், இந்தியா, அல்பேனியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களை ஒரே போன்ற போராட்டங்கள் என சுட்டிக்காட்டியுள்ளது. இந்த போராட்டங்கள், அவை உருவாக காரணமான சூழல்கள் காரணமாக அரசியல் சக்தியாக மாறுமா என்றும் அந்த அமைப்பு கேள்வி எழுப்பியிருந்தது.

இந்தியாவில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தவிர வேறு சில அமைப்புகளின் பெயர்களும் இந்த ரிப்போர்ட்டில் இடம்பெற்று இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த ஐடி தொழிலதிபர் நெவில் ராய் சிங்கம் தற்போது ஷாங்காயில் வசித்து வருகிறார். கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிஸ்ட் அமைப்புகளின் நெட்வொர்க் உடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இது தவிர பிரேக் த்ரூ நியூஸ், கோட்பிங்க், பார்ட்டி ஃபார் சோஷலிசம் அண்ட் லிபரேஷன் ஆகிய அமைப்புகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ்

பிரான்ஸில் பள்ளிகளின் மோசமான நிலை, ஊழியர் பற்றாக்குறை, போதிய வசதிகள் இல்லாதது ஆகியவற்றுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டங்களே இந்த விவகாரத்தின் தொடக்கமாகக் கூறப்படுகிறது. பின்னர் தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் இதில் இணைந்ததாக ஃபாக்ஸ் நியூஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

என்ன சொல்கிறது?

அதாவது போராட்டங்கள் வெவ்வேறு காரணங்களுக்காக தன்னிச்சையாக நடந்தாலும் கூட போராட்ட செய்திகளை பல நாடுகளுக்கு இந்த நெட்வொர்க் பரப்பி வருவதாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைப்புக்கும் இடையே எந்த அளவுக்கு நேரடி ஒருங்கிணைப்பு உள்ளது, அனைத்திற்கும் பின்னணியில் ஒரு சில அமைப்புகள் மட்டும் உள்ளனவா என்தற்கு எல்லாம் இன்னும் தெளிவான பதில்கள் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+