கொரோனா பாதிப்பு.. இந்தியாவில் அறிவிக்கப்பட்டதை விட 8 மடங்கு அதிக உயிரிழப்பு.. ஆய்வில் ஷாக் தகவல்
டெல்லி: கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட 11.9 லட்சம் உயிரிழப்புகள் அதிகம் பதிவாகியிருக்கலாம் என்று ஆய்வில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்த ஆய்வு முடிவுகளை ஏற்க கூடியது இல்லை எனவும் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் நிதி ஆயோக் கூறியுள்ளது.
சீனாவின் உகான் நகரில் இருந்து முதன் முதலாக கொரோனா எனும் பெருந்தொற்று நோய் உலக நாடுகளுக்கு பரவியது. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிப்பட்ட இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஒரு சேர உலுக்கியது. பொதுமுடக்கம், மருத்துவமனையில் நிரம்பி வழிந்த கொரோனா நோயாளிகள் என எங்கு பார்த்தாலும் சுகாதார நெருக்கடி சூழலே ஏற்பட்டது.

கொரோனா உயிரிழப்பு: இந்தியாவிலும் கொரோனா கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா ஏற்படுத்திய தாக்கம் மக்கள் மனதில் இருந்து மெல்ல மெல்ல அகலத் தொடங்கியுள்ள சூழலில், தற்போது கொரோனா உயிரிழப்புகள் குறித்த அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் அரசு அறிவித்த எண்ணிக்கையை விட உண்மையான உயிரிழப்புகள் 8 மடங்கு அதிகம் இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுட் காலம் சரிவு: அதாவது, இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு கூடுதலாக 11.9 லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் ஆதிவாசிகள், தலித்கள், முஸ்லீம்கள் ஆகிய விளிம்பு நிலை மக்களே அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளர் பொருளாதார நிபுணர் ஆகியோர் அடங்கிய குழு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
நியூயார்க்கை சேர்ந்த இந்த ஆய்வுக் குழு, அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் முதல் முறையாக வயது, பாலினம், சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை அடிப்படையில் கொரோனா பாதிப்பால் எந்த அளவு இவர்களது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஆய்வுகளை செய்துள்ளனர். இந்த ஆய்வில் பெண்களும், விளிம்பு நிலை மக்களின் ஆயுட் காலம் அதிக அளவு சரிந்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.
இஸ்லாமியர்கள் தான் அதிகம்: இதில் இஸ்லாமியர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் ஆயுட் காலம் 5.4 ஆண்டுகள் வரை குறைந்து இருப்பதாகவும், பழங்குடியினர்(4.1), எஸ்.சி (2.7) என குறைந்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. உயர் சாதி இந்துக்கள், ஒபிசி பிரிவினர் ஆகியோரின் லைஃப் எக்ஸ்பெடன்சி எனப்படும் ஆயுட்காலம் 1.3 ஆண்டுகள் சரிந்து உள்ளதாக ஆய்வில் கூறியிருக்கிறார்கள்.
பல குளறுபடிகள்: அதிக வருமானம் பெறும் நாடுகளை விட இந்தியாவில் இளம் வயதினர் மத்தியில் ஆயுட்காலம் என்பது பெரிய அளவில் சரிந்து இருப்பதாக ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான சங்கிதா வியாஸ் கூறினார். எனினும், நிதி ஆயோக் உறுப்பினர் ச(சுகாதாரம்) வினோத் பவுல் இது தொடர்பாக கூறுகையில், இந்த ஆய்வில் பல குளறுபடிகள் உள்ளன. எனவேதான் ஆய்வாளர்கள் தவறான முடிவுக்கு வந்துள்ளனர்" என்றார்.
மேலும் இந்தியாவின் சிவில் பதிவேடு அமைப்பில் (CRS)ல் 99 சதவிதமான உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டன என்றார். இந்தியாவில் 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 2020 ல் 4.74 லட்சம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. எனவே 11.99 லட்சம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றார்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications