டெல்லி வந்த 12 பேருக்கு ஓமிக்ரான் சோதனை.. 8 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 3 தினங்களாக வெளிநாடுகளிலிருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த 12 பேருக்கு ஓமிக்ரான் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.

அவர்களுக்கு ஓமிக்ரான் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் லோக் நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் முதல் முறையாக ஓமிக்ரான் பாதிப்பு கடந்த வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. அவர்கள் இருவரும் தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூர் வந்தவர்கள் என தெரியவந்தது. அவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏதும் இல்லை என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

12 Suspected Omicron Cases In Delhi Hospital

வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு ஓமிக்ரான் பரவல் இருக்கலாம் என்ற சந்தேகத்தின்படி கடந்த 24 ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 3 தினங்களாக வெளிநாடுகளிலிருந்து வந்த 12 பேருக்கு ஓமிக்ரான் இருக்கலாம் என சுகாதாரத் துறையினர் சந்தேகித்தனர்.

அதன்பேரில் 12 பேரையும் லோக் நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 8 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று முன் தினம் தெரியவந்தது. 4 பேர் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் அது தொடர்பான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. அந்த 12 பேரில் பிரிட்டனிலிருந்து 4 பேரும், பிரான்ஸில் இருந்து 4 பேரும், சிலர் டான்சானியாவிலிருந்து ஒருவர் பெல்ஜியத்திலிருந்து வந்துள்ளனர். அனைவரும் நலமாக உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு மட்டுமே காய்ச்சல் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களுக்கு ஓமிக்ரானை கண்டறிவதற்கான ஜீனோம் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் 5 அல்லது 6 நாட்களில் வெளிவரும். ஓமிக்ரான் 23 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+