Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: எதிர்க்கட்சிகள் அணியில் இணையாத மமதா, மாயாவதி, கெஜ்ரிவால்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு மாநில விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக பங்கேற்றனர். ஆனால் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆகியவை இந்த ஜோதியில் பங்கேற்கவில்லை.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக 8 மாதங்களாக டெல்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா, உ.பி., ராஜஸ்தான் மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொட்டும் பனி, வாட்டும் குளிர், வதைக்கும் வெயில், மிரட்டும் கொரோனா அச்சுறுத்தல் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் டெல்லி எல்லைகளில் முகாமிட்டு விவசாயிகள் போராட்டம் தொடருகிறது.

மத்திய அரசு சில முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறப் போவது கிடையாது; திருத்தங்கள் வேண்டுமானால் செய்வோம் என திட்டவட்டமாக மத்திய அரசு கூறியது. இதனை ஏற்க மறுத்து விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். உச்சநீதிமன்றமும் இதில் தலையிட்டு விவசாய சட்டங்களை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தது.

ஜந்தர் மந்தரில் போராட்டம்

ஜந்தர் மந்தரில் போராட்டம்

8 மாதங்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பிரதமர் மோடி இதுவரை சந்தித்து பேசாதது ஏன்? என்பது எதிர்க்கட்சிகளின் கேள்வி. இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருவதால் தங்களை டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட அனுமதிக்க கோரி இருந்தனர் விவசாயிகள். இதற்கு டெல்லி போலீசார் அனுமதி கொடுத்தனர். டெல்லி எல்லைகளில் இருந்து 200 விவசாயிகளை மட்டும் கடந்த ஜூலை 22-ந் தேதி பேருந்தில் ஜந்தர் மந்தருக்கு போலீசார் அழைத்து வந்தனர். ஜந்தர் மந்தரில் விவசாயிகள் நாடாளுமன்றத்தை கூட்டி தங்களது கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகளும் பங்கேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பு

இதனிடையே பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக காங்கிரஸ், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்திருக்கிறது. பாஜக அரசுக்கு எதிராக பெகாசஸ் ஒட்டு கேட்பு, விவசாயிகள் போராட்டம் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவது என 14 எதிர்க்கட்சிகளும் தீர்மானித்துள்ளன. இன்று காலை டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், எஞ்சிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எப்படி நெருக்கடி கொடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்றாக இணைந்து பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பேருந்து மூலம் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஜந்தர் மந்தருக்கு சென்று போராட்டத்தில் பங்கேற்றனர்.

லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டம்

லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டம்

எதிர்க்கட்சிகளின் இந்த ஒற்றுமையானது 2024 லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப் படி டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் பின்னர் எதிர்க்கட்சிகள் அணியானது காங்கிரஸ் பங்கேற்பு இல்லாமல் சாத்தியம் இல்லை என பல்டி அடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டிருந்த மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி, காங்கிரஸ் தலைமையில் மாநில கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். அத்துடன் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.பி.க்களையும் மமதா சந்தித்து பேசியிருந்தார். அப்போது, மாநில கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டால் 6 மாதங்களில் களநிலவரமே தலைகீழாக மாறும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ஓரணியில் 14 எதிர்க்கட்சிகள்

இதன்பின்னர் திமுக, இடதுசாரிகள், ஆர்ஜேடி, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை டெல்லியில் காங்கிரஸ் கூட்டியது. மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான இந்த கூட்டத்தில்தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் இனி மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்தே செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர்கள் ஒவ்வொரு பிரச்சனையின் போதும் கூடி ஆலோசித்து அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்கின்றனர். இதனடிப்படையில்தான் டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்திலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று ஒன்றாக பங்கேற்றுள்ளனர்.

திரிணாமுல், பிஎஸ்பி, ஆம் ஆத்மி புறக்கணிப்பு

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் அணியில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி ஆகியவை பங்கேற்கவில்லை. ஜந்தர் மந்தரில் விவசாயிகளுடன் இணைந்து விவசாயிகளைக் காப்பாற்றுங்கள்! இந்தியாவை காப்பாற்றுங்கள் என ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் முழக்கமிட்டனர். இந்த முழக்கங்களுடனான பதாகைகளையும் அவர்கள் ஏந்தி இருந்தனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி தலைவர் சுஷில் குமார் குப்தா, எதிர்க்கட்சிகள் ஏன் ஒரு கட்சித் தலைவரான ராகுல் காந்தி தலைமையில் போக வேண்டும்? விவசாயிகள் பிரச்சனையை சரியாக எழுப்பாதவர் ராகுல் காந்தி என சாடினார். ஆனால் இதனை மறுத்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் சென்றோம். ராகுல் காந்தியும் எங்களுடன் கலந்து கொண்டார் என விளக்கம் தந்துள்ளார். ஜந்தர் மந்தரில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இங்கே வந்திருக்கிறோம். நாடாளுமன்றத்தில் பெகாசஸ் ஒட்டு கேட்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியோ இந்தியர்களின் செல்போனை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என சாடினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+