டியோடரண்ட்டை பயன்படுத்திய 14 வயது சிறுமி மாரடைப்பால் பலி.. பரபரக்கும் பிரேத பரிசோதனை அறிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் உடல் நறுமணத்திற்கு பயன்படுத்தப்படும் வாசனை திரவத்தை (டியோடரண்ட்) பயன்படுத்திய 14 வயது சிறுமி மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடலில் இருந்து வரும் வியர்வையால் துர்நாற்றம் வீசும். இதை கட்டுப்படுத்த உடலில் டியோடரண்ட் எனப்படும் வாசனை திரவியத்தை சிலர் பயன்படுத்துவது வழக்கம். அது போல் உடைக்கு மேல் பயன்படுத்தப்படும் பர்ஃபியூம், சென்ட் ஆகியவையும் விற்பனை செய்யப்படுகின்றன.

இவற்றில் பெரும்பாலும் ஆல்கஹால் இருக்கும். இந்த டியோடரண்ட்களில் பெரும்பாலும் நச்சுத் தன்மையான பொருளை கொண்டே தயாரிக்கப்படுகிறது. இதனால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது பலரும் அறியாத ஒன்று. இந்த டியோடரண்ட்கள் எத்தனை விலையாக இருந்தாலும் அவற்றை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

டியோடரண்ட்கள்

டியோடரண்ட்கள்

இந்த டியோடரண்ட்களை நேரடியாக உடலில் பயன்படுத்துவதால் சரும நோய்களும் வரும். சில டியோடரண்டுகள் அரிப்பு தன்மையை தரும், ஆங்காங்கே வீங்கவும் செய்யும். இன்னும் சில டியோடரண்டுகளால் ஏற்படும் பாதிப்பால் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் சொரிந்து சொரிந்து ரணமாகி புண் போல் ஏற்படும்.

உபாதைகள்

உபாதைகள்

இப்படியெல்லாம் டியோடரண்ட் உடலுக்கு உபாதைகளை தரும் என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு டியோடரண்ட் ஒரு சிறுமியின் உயிரையே கொன்றிருக்கிறது என்பதை நம்ப முடிகிறதா? ஆம் இந்த சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது. டெல்லியை சேர்ந்தவர் ஜியோர்ஜியா கிரீன். இவருக்கு 14 வயதாகிறது.

 படுக்கை

படுக்கை

இவர் ஒரு டியோடரண்ட்டை படுக்கை முழுவதும் தெளித்துள்ளார். அத்துடன் தனது போர்வையிலும் தெளித்துள்ளார். ஏசி அறையால் அனைத்து கதவுகளும் ஜன்னல்களும் மூடப்பட்ட நிலையில் அந்த டியோடரண்டில் இருந்து ஏரோசால் (aerosol) எனப்படும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு கெமிக்கல் அளவுக்கு அதிகமாக வெளியேறியுள்ளது.

கெமிக்கல் முறை

கெமிக்கல் முறை

இந்த கெமிக்கல் அறை முழுவதும் பரவியது. இதை சிறுமி சுவாசித்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அவருக்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதுகுறித்து ஜியோர்ஜியாவின் தந்தை கூறுகையில் டியோடரண்டுகளில் உள்ள எச்சரிக்கைகள் முழுவதும் மிகவும் சிறிய எழுத்துகளில் பொரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

டியோடரண்டுகள்

டியோடரண்டுகள்

டியோடரண்டுகளினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அறியாத பெற்றோர் இது போல் குழந்தைகள் கேட்டதால் விலையுயர்ந்த டியோடரண்டுகளை வாங்கி கொடுத்துவிடுகிறார்கள். இது உயிரிழப்பை ஏற்படுத்திவிடுகிறது. ஜியோர்ஜியாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் டியோடரண்ட் என்பதற்கு பதில் ஏரோசாலை சுவாசித்ததால் உயிரிழப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜியோர்ஜியா

ஜியோர்ஜியா

ஜியோர்ஜியாவுக்கு ஆட்டிசம் குறைபாடு இருந்துள்ளது. அவர் பொதுவாக தனது போர்வைகளில் டியோடரண்டுகளை தெளித்து கொள்ள அதிகம் விரும்புவாராம். இந்த நறுமணம் மட்டுமே தன் மனதை அமைதியாக்கி தூக்கத்தை வரவழைக்கும் என கருதினாராம். இது போன்று டியோடரண்டுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக முகத்திற்கு பயன்படுத்தப்படும் பவுடர்களை பயன்படுத்தலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

 மாரடைப்பு என்றால் என்ன, அறிகுறிகள் யாவை?

மாரடைப்பு என்றால் என்ன, அறிகுறிகள் யாவை?

மாரடைப்பு என்றால் என்ன- மாரடைப்பு என்பது மிகவும் மோசமான நிலையாகும். இதயம் துடிப்பது உடனே நின்றுவிடும். இதனால் நோயாளி திடீரென சரிந்து விழுந்துவிடுவார். இதனால் அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. இந்த மாரடைப்பு ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம். நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், மூச்சுவிடுவதில் சிரமம், மயக்க நிலை, தலைச்சுற்றல், நிலையற்ற இதய துடிப்புகள் உள்ளிட்டவையே ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+