டெல்லியில் சிக்கிய ஐ.எஸ். தீவிரவாதி வீட்டில் குவியல் குவியலாக வெடிபொருட்கள், தற்கொலை அங்கிகள்!
டெல்லி: டெல்லியில் சிக்கிய ஐ.எஸ். தீவிரவாதியின் வீட்டில் குவியல் குவியலாக வெடிபொருட்கள், தற்கொலை தாக்குதல் நடத்துவதற்காக அங்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Recommended Video
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்தகீம் கான் என்ற ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க பயங்கரவாதி டெல்லியில் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது டெல்லியில் கரோல் பாக் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற முஸ்தகீம் கானை பயங்கரவாத தடுப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். இதனால் பாதுகாப்பு படையினர் மீது முஸ்தகீம் கான் துப்பாக்கிச் சூடு நடத்தினார். பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச் சூடு முஸ்தகீம் கானை சுற்றி வளைத்து பிடித்தனர்.
முஸ்தகீம் கான் வசம் இருந்த 2 குக்கர் வெடிகுண்டுகள், துப்பாக்கி தோட்டக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த குக்கர் வெடிகுண்டுகள் உடனடியாக செயலிழக்கச் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து முஸ்தகீம் கானின் சொந்த ஊராக உத்தரப்பிரதேச மாநிலம் பால்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இந்த வீட்டில் இருந்து 15 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்கள் புதைத்து வைத்திருந்தது அம்பலமானது. அத்துடன் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கான அங்கிகளும் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க கொடி, பிரசுரங்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தற்கொலை தாக்குதல் அங்கிகள் தாக்குதல் நடத்துவதற்கு தயாரான நிலையில் இருந்திருக்கின்றன.
இதனிடையே என் மகன் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக வருந்துகிறேன்; அவருக்கு வாய்ப்பு இருந்தால் மன்னிப்பு கொடுங்கள் என முஸ்தகீம்கான் தந்தை கூறியுள்ளார். இதேபோல், வெடிபொருட்களை வைக்க கூடாது என தடுத்துப் பார்த்தும் அவர் கேட்கவில்லை.. 4 குழந்தைகளுக்காக அவரை மன்னிக்க வேண்டும் என விரும்புகிறேன் என முஸ்தகீம் கான் மனைவியும் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications