"புயல் ஓயாது".. இந்தியாவிற்கு எதிராக திரண்ட 15 நாடுகள்! கையை பிசையும் டெல்லி! காத்திருக்கும் சிக்கல்?
டெல்லி: நுபுர் சர்மாவின் கருத்தால் இந்தியாவிற்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் இப்போதைக்கு சரியாகாது, இதனால் ஏற்பட்ட புயல் இப்போதைக்கு அடங்காது என்று சர்வதேச அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசும் பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மா, சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இது பெரிய அளவில் சர்ச்சையானது.
இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். கத்தார் உள்ளிட்ட நாடுகள் நுபுர் சர்மாவின் கருத்து தொடர்பாக இந்தியாவிடம் விளக்கம் கேட்டது.

திரண்டு வந்த நாடுகள்
இந்த நிலையில் ஒவ்வொரு நாடாக இந்தியாவிற்கு தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுவரை இந்தியாவிற்கு 15 நாடுகள் இந்த விவகாரத்தில் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஓமன், அரபு அமீரகம், ஜோர்டன், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், பாகிஸ்தான், மாலத்தீவு, லிபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு எதிராக திரண்டு உள்ளன. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையான அழுத்தம் கொடுக்கப்படுவதாக இந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

இப்போதைக்கு சரி ஆகாது
இந்த நிலையில் பிபிசி ஆங்கில ஊடகத்திடம் கருத்து தெரிவித்த அரசியல் வல்லுனர்கள், இந்த மோதல் இப்போதைக்கு சரியாகாது என்று குறிப்பிட்டு உள்ளனர். இந்த விவகாரம் சர்வதேச அளவில் வெடித்துள்ளது. பல இஸ்லாமிய நாடுகளை இந்த விவகாரம் கொதிப்படைய செய்துள்ளது. இஸ்லாமிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெளிவாக தெரிகிறது. இந்தியாவில் நடைபெறும் சமீபத்திய சம்பவங்கள் இஸ்லாமிய நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. அதனால் இப்போதைக்கு பிரச்சனை சரி ஆகாது, என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொது மன்னிப்பு
இந்த விவகாரத்தில் இந்தியா பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் கூறியுள்ளது. பாஜக தங்கள் நிர்வாகிகளை நீக்கியதை வரவேற்கிறோம். ஆனால் இந்தியா இது தொடர்பாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்தியாவில் அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று கத்தார் கூறியுள்ளது. இந்தியாவில் நடக்கும் விஷயங்களை கடுமையாக கண்டிக்கிறோம் என்று சவுதி அரேபியாவும் கடுமையாக விமர்சித்துள்ளது.
Recommended Video

இந்தியா எதிர்ப்பு
இந்த நாடுகளின் எதிர்ப்புகளை சமாளிக்க இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் டெல்லி சார்பாக களமிறக்கப்பட்டு உள்ளனர். இந்திய வெளியுறவுத்துறை நிர்வாகிகள் சார்பாக பல்வேறு நேரடி, மறைமுக அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 57 நாடுகள் கொண்ட Organisation of the Islamic Conference எனப்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்தது. இதற்கு " நீங்கள் குறுகிய எண்ணத்தோடு செயல்படுகிறீர்கள்" என்று இந்தியாவும் பதிலடி கொடுத்து இருந்தது. ஆனால் மற்ற நாடுகளின் விமர்சனத்திற்கு இந்தியா பதில் அளிக்கவில்லை. கத்தாருக்கு மட்டும் இந்தியா, அது எங்கள் நாட்டின் கருத்து கிடையாது என்று தன்மையாக பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.

டாப் லீடர்
இது தொடர்பாக பிபிசி ஆங்கிலத்திடம் உலக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ள கருத்தில், இந்தியாவின் டாப் லீடர்கள்.. அதாவது ஆட்சியில் இருக்கும் உயர் தலைவர்கள் இதில் விளக்கம் கொடுக்க வேண்டும். அவர்கள் தாமாக முன் வந்து கருத்து தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சனை தீரும். அதுவரை இஸ்லாமிய நாடுகள் இந்த விவகாரத்தை சும்மா விட வாய்ப்பு இல்லை. பாஜக வெறுமனே மதங்களை மதிக்கிறோம் என்று கூறுவது எல்லாம் பிரச்சனையை தீர்க்காது என்று தெரிவித்துள்ளனர்.

ஏன் சிக்கல்
இந்தியா ஜிசிசி எனப்படும் Gulf Cooperation Council (GCC) உடன் மிக அதிக அளவில் வர்த்தகம் செய்து வருகிறது. குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஓமன், பஹ்ரைன் மற்றும் யுஏஇ ஆகிய நாடுகளுடன் இந்த வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த ஜிசிசி நாடுகளுடனான வர்த்தகம் என்பது 87 பில்லியன் டாலர் ஆகும். ஒவ்வொரு வருடமும் இந்த வர்த்தகம் உயர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இஸ்லாமிய நாடுகளுடன் ஏற்பட்டுள்ள மோதல் இந்தியாவிற்கு ஏற்றுமதி, இறக்குமதி ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு











Click it and Unblock the Notifications