“ஷாக்” ரிப்போர்ட்.. வீதியே விதியா? தெருவில் வசிக்கும் 19,546 குழந்தைகள் - புதிய இந்தியாவின் சோக நிலை
19,546 குழந்தைகள் இந்திய வீதிகளில் வசிப்பதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் 19,546 குழந்தைகள் வீதியில் வசிப்பதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது. அதேபோல் 886 குழந்தைகள் பெற்றோர் இல்லாமல் வீதியில் வசிப்பதாகவும், இதில் பெரும்பாலானோர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று அந்த ஆணையம் கூறி உள்ளது.
புதிய இந்தியா, வல்லரசு இந்தியா, மாபெரும் தொழில்நுட்ப வளர்ச்சி, 5ஜி சேவை என பெருமையாக பல விசயங்களை பேசினாலும் மாறாத பல விசயங்கள் உள்ளன. அதில் முதன்மையானது வறுமை.
பெரு நகரங்களில் கட்டிடங்களின் உயரும், எண்ணிக்கையும் அதிகரிக்கும் அதே நேரம், அதே நகரங்களில் வீடுகள் இன்று வீதியில், நடைபாதைகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே வருகின்றன. இதில் பெரும்பாலும் குழந்தைகளே பாதிக்கப்படுகின்றனர்.

வீதியில் 19,546 குழந்தைகள்
இந்த நிலையில்தான் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வீதியில் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி 19,546 குழந்தைகள் இந்தியாவில் வீடுகள் இல்லாமல் வீதியில் பெற்றோர்களுடனும் தனியாகவும் வசிக்கிறார்களாம். இந்த பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது.

மகாராஷ்டிரா முதலிடம்
இந்தியாவின் பொருளாதார தலைநகரம் என்று அழைப்படும் மும்பையை தலைநகராக கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில் 5,153 குழந்தைகள் வீடுகள் இன்றி வீதியில் வசிக்கின்றனர். அடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 1,990 குழந்தைகள் வீதிகளில் உள்ளனர். இதில் மூன்றாவது இடத்தில் இருப்பது தலைநகர் டெல்லி. அங்கு 1,853 குழந்தைகளில் வீதியில் வசிக்கிறார்கள்.

4 வது இடத்தில் தமிழ்நாடு
டெல்லிக்கு அடுத்தபடியாக 4 வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. 1719 குழந்தைகள் தமிழ்நாட்டில் வீதிகளில் வசிக்கின்றன. அடுத்ததாக நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் 1,220 குழந்தைகளும், உத்தரப்பிரதேசத்தில் 1,038 குழந்தைகளும் வீடுகள் இன்றி வீதிகளில் வசித்து வருவதாக தேசிய குழந்தை உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.

பெற்றோர் இல்லாத குழந்தைகள்
அதேபோல், இந்த 19,546 குழந்தைகளில் 10,401 குழந்தைகள் வீதிகளில் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். 8,263 குழந்தைகள் பகல் நேரங்களில் வீதியில் இருந்துவிட்டு இரவு உறங்குவதற்காக மட்டும் குடிசை பகுதிகளில் உள்ள தங்கள் வீட்டுக்கு உறங்க செல்கிறார்கள். இதில் 1,266 குழந்தைகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் 1,203 குழந்தைகளுடன் டெல்லி 2 வது இடத்திலும் உள்ளன.

முதலிடத்தில் உத்தரப்பிரதேசம்
அதேபோல் 882 குழந்தைகள் பெற்றோர்கள் இன்றி தனியாக வீதிகளில் வசிக்கின்றனர். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது உத்தரப்பிரதேசம். அங்கு 270 குழந்தைகள் பெற்றோர்களோ, உறவினர்களோ, பாதுகாவலர்களோ இன்றி வீதியில் இருக்கின்றனர். இதில் 2வது இடத்தில் தமிழ்நாடு. இங்கு 124 குழந்தைகள் பெற்றோர் இன்றில் வீதியில் உள்ளார்கள்.

வாழ்வாதாரம் என்ன?
3 வது இடத்தில் 105 பேருடன் கர்நாடகாவும், 61 பேருடன் 4 வது இடத்தில் டெல்லியும், 39 பேருடன் 5 வது இடத்தில் மகாராஷ்டிராவும் இருக்கின்றன. இவ்வாறு வீதிகளில் வசிக்கும் குழந்தைகள் கைக்கு கிடைத்த சிறிய வேலைகளை செய்தும், ஏதாவது பொருட்களை விற்பனை செய்தும், யாசகம் பெற்றும் தங்கள் தேவையானதை வாங்கிக் கொள்கின்றன.

யார் இவர்கள்?
பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்கள், பெற்றோர்களை இழந்தவர்கள், குழந்தை தொழில் ஈடுபடுத்தப்பட்டவர்களே இவர்களில் அதிகம். இந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் சிறு வயதில் தங்கள் பெற்றோருடன் சொந்த ஊரில் பெரு நகரங்களுக்கு பிழைப்பு தேடி வந்தவர்கள். இவ்வாறு வீதியில் வசிப்பவர்கள் அடிக்கடி வெவ்வேறு நகரங்களுக்கு செல்வதால் இதை கணக்கிடுவதிலும் சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
-
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications