ஆசியாவிலேயே சிறந்த 200 கல்வி நிறுவனங்கள்.. ஐஐடி மெட்ராஸ், அண்ணா பல்கலைக்கழத்துக்கு இடம்.. அசத்தல்
டெல்லி: ஆசியாவில் உள்ள முக்கிய 200 கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை க்யூஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஐஐடி மெட்ராஸ், அண்ணா பல்கலைக்கழகம், விஐடி வேலூர் உள்பட மொத்தம் 19 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன.
உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள்/அமைப்புகள் குறிப்பிட்ட துறை சார்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். சிறந்த பல்கலைக்கழங்கள், சிறந்த கல்லூரிகள், சிறந்த சுற்றுலா தலங்கள் எவை என்பது பற்றி பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில் சர்வதேச தரவரிசை கழங்களில் ஒன்றாக க்யூஎஸ் அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு ஆசியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களாக உள்ள பல்கலைக்கழங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஐஐடி மெட்ராஸ்/அண்ணா பல்கலைக்கழகம்
இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பல்கலைக்கழங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது 2023ம் ஆண்டுக்கான ஆசிய பல்கலை கழகங்களின் டாப் 200 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஐஐடி மெட்ராஸ், அண்ணா பல்கலைகழகம் உள்பட இந்தியாவில் இயங்கி வரும் 19 பல்கலைக்கழங்கள் இடம்பெற்றுள்ளன.

ஐஐடி மெட்ராசுக்கு எந்த இடம்?
அதன்படி இந்த தரவரிசை பட்டியலில் மும்பை ஐஐடி 40வது இடத்தில் உள்ளது. டெல்லி ஐஐடி 46வது இடத்திலும், பெங்களூர் ஐஐஎஸ்சி 52வது இடத்திலும், ஐஐடி மெட்ராஸ் 53வது இடத்திலும் உள்ளது. இதையடுத்து ஐஐடி காரக்பூர் 61வது இடத்திலும், ஐஐடி கான்பூர் 66வது இடத்திலும், டெல்லி யூனிவர்சிட்டி 85வது இடத்திலும் ஐஐடி ரூர்க்கேவும் உள்ளது. மேலும் ஜேஎன்யூ 119வது இடத்திலும், ஐஐடி கவுஹாத்தி 124வது இடத்திலும், வேலூர் விஐடி பல்கலைக்கழகம் 173வது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் அமித்தி பல்கலைக்கழம் நொய்டா 200வது இடத்தை பிடித்துள்ளது. இதுதவிர

அண்ணா பல்கலைக்கழகம்
மேலும் கொல்கத்தா பல்கலைக்கழகம் 181வது இடத்திலும், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் 182வது இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம், சண்டிகர் பல்கலைக்கழகம் 185வது இடத்திலும், ஐஐடி இந்தூர் 185வது இடத்திலும், பிட்ஸ் பிலானி 188வது இடத்திலும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா 188வது இடத்திலும் உள்ளன. அமிட்டி யூனிவர்சிட்டி நொய்டா 200வது இடத்திலும் உள்ளது.

8 பல்கலைகழகங்கள் முன்னேற்றம்
இவை அனைத்தும் இந்திய பல்கலை கழகங்களும் கல்வி பொது மதிப்பீடு மற்றும் சர்வதேச ஆராய்ச்சி பணியில் மேம்பாடு அடைந்து உள்ளன. மேலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த முறை வெளியான பட்டியலில் இந்தியாவின் 8 பல்கலைக்கழங்கள் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளன என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications