சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற 3 லோக்சபா சபாநாயகர் தேர்தல்கள்.. என்ன நடந்தது? வென்றவர்கள் யார்?
டெல்லி: நாடு விடுதலைக்குப் பின்னர் சுதந்திர இந்தியாவில் 3 முறை லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 1952, 1967 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. 1980களின் இறுதிகளுக்குப் பின்னர் இந்தியாவில் கூட்டணி ஆட்சிகளின் சகாப்தம் தொடங்கியதால் ஒவ்வொரு முறையும் சபாநாயகர் யார் என்பதும் முக்கியத்துவம் பெற்றது; மத்தியில் கூட்டணி ஆட்சிகள் அமைந்த காலங்களில் கூட்டணி கட்சிகளுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்பட்டன.
1952-ம் ஆண்டு முதலாவது லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் ஜவஹர்லால் நேரு மவ்லாங்கரை சபாநாயகர் பதவிக்கு முன்மொழிந்தார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவரான இடதுசாரித் தலைவர் ஏகே கோபாலன், சந்தர் சந்தானத்தை முன்மொழிந்தார். இதனால் லோக்சபா சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் மவ்லாங்கர் 394 வாக்குகளையும் சங்கர் சந்தானம் 55 வாக்குகளையும் பெற்றனர். இதில் வேடிக்கை என்னவெனில் சங்கர் சந்தானம் பெயர், லோக்சபா சபாநாயகர் பதவிக்கான வாக்காளர் பட்டியலிலே இல்லாமல் இருந்ததுதான்.

1967-ம் ஆண்டு தேர்தல்: 1967-ம் ஆண்டும் லோக்சபா சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் நீலம் சஞ்சீவ ரெட்டியும் தென்னேதி விஸ்வநாதனும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் நீலம் சஞ்சீவ ரெட்டி 278 வாக்குகளும் அவருக்கு எதிராக 207 வாக்குகளும் பெறப்பட்டன. இதனையடுத்து நீலம் சஞ்சீவ ரெட்டி சபாநாயகரானார்.
1976-ம் ஆண்டு தேர்தல்: 1976-ம் ஆண்டு அவசரநிலை பிரகடனம் திரும்பப் பெறப்பட்ட பின்னர் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சிகள் வென்றன. அப்போதும் லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பலிராம் பகத், ஜகன்னாத் ராவ் ஆகியோர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் பலிராம் பகத், 344 வாக்குகளையும் ஜகன்னாத் ராவ் 58 வாக்குகளையும் பெற்றனர். இதனையடுத்து பலி ராம் பகத் சபாநாயகரானார்.

இதன் பின்னர் 1989-ல் இருந்து கூட்டணி ஆட்சிகளின் சகாப்தம் இந்தியாவில் லிமையானதால் 'சபாநாயகர்' பதவியும் முக்கியத்துவம் பெற்றதானது.
1989-ம் ஆம் ஆண்டு தேசிய முன்னணி ஆட்சி அமைத்த போது ஜனதா தளத்தின் ரபி ராய் சபாநாயகராக்கப்பட்டார். 1991-ல் காங்கிரஸ் ஆட்சியில் சிவராஜ் பட்டீல் சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

1998-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தெலுங்கு தேசம் கட்சியின் பாலயோகி சபாநாயகரானார். 1999-ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னரும் பாலயோகி சபாநாயகராக தேர்வானார். பாலயோகி மரணம் அடைந்த பின்னர் சிவசேனாவின் மனோகர் ஜோஷி, சபாநாயகர் பதவி வகித்தார். 2004-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பதவிக்கு வந்த போது இடதுசாரிகளின் சோம்நாத் சட்டர்ஜி சபாநாயகரானார். 2009-ம் ஆண்டு மீரா குமார் சபாநாயகராக்கப்பட்டார். 2014-ல் பாஜக ஆட்சி அமைத்த போது சுமித்ரா மகாஜனும் 2019-ல் பாஜக மீண்டும் வென்ற போது ஓம் பிர்லாவும் சபாநாயகர் பதவி வகித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications