1971-லேயே பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டிய தமிழ்நாடு ரெஜிமெண்ட்! போருனு வந்தா தமிழக வீரர்கள் வேற லெவல்
சென்னை: இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தானின் தாக்குதலை தடுக்கும் அதே நேரத்தில் பதில் தாக்குதலுக்கான யுக்தியையும் இந்தியா சிறப்பாக வகுத்து வருகிறது. இந்திய ராணுவத்தில் தமிழக வீரர்களும் இருக்கிறார்கள். போர் களத்தில் எதிரிகளுடன் அவர்களது சண்டை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். இதைப்பற்றி இந்த செய்தி விவரிக்கிறது.
இப்போது போலவே 1971ம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக இந்திய ராணுவம் பாகிஸ்தானுடன் மோதியது. அப்போது இந்திய ராணுவத்தில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர்களின் பங்கு அளப்பரியதாக இருந்தது.

1971ல் தமிழக வீரர்கள் இடம்பெற்றிருந்த ரெஜிமெண்டின் பெயர் 'மெட்ராஸ் ரெஜிமெண்ட்' ஆகும். இவர்கள் அக்ஹுரா சண்டையில் பாகிஸ்தானை தோற்கடித்தார்கள். அக்ஹுரா என்பது ஒரு ராணுவ மையம். தற்போதய வங்கதேசம், முன்னர் கிழக்கு பாகிஸ்தானாக இருந்தது. இதன் தலைநகர் டாக்காவிலிருந்து 90 கி.மீ தொலைவில் அக்ஹுரா அமைந்திருந்தது. 1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-7ம் தேதி வரை இந்த பகுதியில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் தாக்குதலை நடத்தியது. ஒரு நாளைக்கு 40 கி.மீ என இந்த படை முன்னேறியது.
கொஞ்சமும் பழக்கமில்லாத வானிலை. முழுவதும் கரடு முரடான மலைப்பாதை. இருந்தாலும் சலிக்காமல் இந்த ரெஜிமெண்ட் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருந்தது.
அக்ஹுராவை கைப்பற்றி டாக்காவுக்கு வழியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதுதான் மெட்ராஸ் ரெஜிமெண்ட்டுக்கு கொடுக்கப்பட்ட பணி. இதில் தமிழகத்தை சேர்ந்த லெப்டினன்ட் கே.எஸ். ராமசாமி பாகிஸ்தான் படைகளின் டாங்கிகளை சிதறடித்து முன்னரே யுக்தியை வகுத்து செயல்படுத்தினார். அதேபோல ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் ஆர். முத்துசாமி, தான் காயமடைந்தபோதும் தனது படைகளுக்கு உட்சபட்ச உதவியை செய்தார். இப்படியாக அக்ஹுரா கைப்பற்றப்பட்டது.
இத்துடன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் தனது பணியை நிறுத்திக்கொள்ளவில்லை. கோமிலா எனும் பகுதியை கைப்பற்ற 57 மவுண்டன் பிரிகேட் படைக்கு உதவியது. இது கைப்பற்றப்பட்டால்தான், டாக்காவுக்கு பாகிஸ்தானிடமிருந்து வரும் அத்தனை உதவிகளையும் நிறுத்த முடியும். இதனை கைப்பற்றி சுமார் 1500 பாகிஸ்தான் வீரர்களை மெட்ராஸ் ரெஜிமெண்ட் சிறைபிடித்தது.
அதன் பின்னர் இறுதி கட்டமாக சந்த்பூர் எனும் பகுதியையும் கைப்பற்ற உதவியது. இது நதிக்கரை நகரம். இங்கு பாகிஸ்தான் கடற்படை இருந்தது. எனவே இந்திய ராணுவம், இந்திய கடற்படையின் உதவியுடன் தாக்குதலை நடத்தினார்கள். இதற்கு மெட்ராஸ் ரெஜிமெண்ட் பக்க பலமாக இருந்தது. இறுதியாக டாக்கா கைப்பற்றப்பட்டது.
இந்த வெற்றிக்கு தொடக்க புள்ளியாக அமைந்தது அக்ஹுரா வெற்றிதான். இது தாமதமாகியிருந்தால் இந்திய ராணுவத்தால் டாக்காவை கைப்பற்றியிருக்க முடியாது.
இன்று மெட்ராஸ் ரெஜிமெண்ட்டின் பெயர் தமிழ்நாடு ரெஜிமெண்ட் என மாற்றப்பட்டிருக்கிறது. ஆக இப்படித்தான் தமிழ்நாடு ரெஜிமெண்ட் போரில் சண்டையிடும்.












Click it and Unblock the Notifications