சின்ன வெங்காயம் வெறும் ரூ.29.. தமிழகத்துக்கும் வந்தாச்சு ஹேப்பி நியூஸ்.. மத்திய அரசின் அடுத்த அதிரடி
டெல்லி: நாளுக்கு நாள் வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில், மத்திய அரசு மலிவு விலை வெங்காய விற்பனையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த அறிவிப்பானது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு விளையும் வெங்காயம், பிற நாடுகளுக்கும், பிற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆனால் கடந்த வருடம் வெங்காய உற்பத்தி குறைத்துவிட்டதால், இந்தியாவிலேயே வெங்காயத்திற்கான தேவைகள் அதிகம் இருந்தன.. எனவே, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கோரிக்கைகள்: வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்த நிலையில், சமீபத்தில்தான், மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் வெங்காய ஏற்றுமதி தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலம் நடைபெறும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது..
அதன்படி, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூடான், பஹ்ரைன், மொரீஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு 99 ஆயிரத்து 150 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது.
பருவமழை: இதனிடையே, பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியா முழுதுமே உணவுப்பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. ஆனால், மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில், பருவமழை காரணமாக, காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், பல்வேறு மாநிலங்களில் காய்கறிகளின் சில்லரை விற்பனையும் அதிகரித்துவிட்டது. இதில், தவிர்க்க முடியாத அளவுக்கு உச்சத்துக்கு போனது வெங்காயத்தின் விலைதான்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில், 1 கிலோ வெங்காயத்தின் விலை 33.41 ரூபாயாக இருந்த நிலையில், இப்போது அகில இந்திய அளவில் வெங்காயத்தின் சராசரி சில்லரை விலை, கிலோ 49 ரூபாய் 21 பைசாவாக இருக்கிறதாம். கடந்த வருடம் 1 குவின்டால் வெங்காயத்தின் விலை 2,560 ரூபாய் 19 பைசாவாக இருந்த நிலையில், இப்போது 1 குவின்டால் வெங்காயத்தின் விலை, 4,158 ரூபாய் 71 பைசாவாக உயர்ந்துள்ளது.
நடவடிக்கை: அதனால்தான், பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது... இதில் ஒன்றுதான், சலுகை விலையில் பொதுமக்களுக்கு வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாகும்.. நடமாடும் வேன்கள் மற்றும் கூட்டுறவு கடைகள் வாயிலாக இந்த வெங்காயம் விற்கப்படுகிறது.. 35 ரூபாய்க்கு, 1 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கையை எடுத்துள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய விவசாய கூட்டுறவு சந்தைப்படுத்து கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்கள் வாயிலாக, இந்த சில்லறை விற்பனையை மத்திய அரசு துவங்கியுள்ளது...
விற்பனை: அந்தவகையில், டெல்லி, மும்பையில் இந்த சில்லரை விற்பனை முதல்கட்டமாக துவங்கப்பட்டது. நடமாடும் வேன்களில் வெங்காய விற்பனையை, டெல்லியில் துவங்கி வைத்த மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று துவக்கி வைத்தார். இந்த மலிவு விலை வெங்காயமானது, அடுத்த வாரம் சென்னை உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications