2,873 குற்றவாளிகள் ஊடுருவல்.. டெல்லி கரப்பான்பூச்சி கட்சி போராட்டத்தில் பங்கேற்றோரின் ஷாக் பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' போராட்டத்தில் மொத்தம் 2,873 குற்றப்பின்னணி கொண்ட நபர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக 101 கொலை குற்ற பின்னணியையும், 61 பேர் பலாத்கார வழக்கின் பின்னணியையும் கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். 'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

delhi protest cockroach janta party

கடந்த 20ம் தேதி அவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றபோது போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து வன்முறை வெடித்தது. இருப்பினும் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வைத்தனர்.

தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது டெல்லி போலீசார் திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். குற்றப்பின்னணி கொண்டவர்கள் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டெல்லி போலீசார் கூறியுள்ளதாவது: ''டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் கடந்த 20ம் தேதி முதல்25 ம் தேதி வரை குற்ற பின்னணி கொண்ட 2,873 பேர் பங்கேற்றனர். இவர்கள்கொலை, பலாத்காரம், கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள்.

இவர்களில் 989 பேர் கடுமையான குற்றப்பின்னணியை கொண்டவர். 284 பேர் கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர்கள், குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் 101 கொலை குற்றவாளிகளும், 6 போக்சோ குற்றவாளிகள் உள்ப பட 61 பலாத்கார குற்றவாளிகளும் பங்கேற்றனர். இவர்கள் தவிர 229 பேர் சட்டவிரோத ஆயுத வழக்கை எதிர்கொண்டவர்கள், 135 பேர் தங்செயின் பறிப்பு வழக்கை கொண்டவர்கள், 67 பேர் போதைப்பொருள் கடத்தல் வழக்கை எதிர்கொள்பவர்கள் ,19 பேர் கடத்தல் வழக்கின் பின்னணியை கொண்டவர்கள் எனபது தெரியவந்துள்ளது.

கொலை வழக்கில் தொடர்புடைய 101 பேரில் 42 பேர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கொலை வழக்கில் தொடர்பு கொண்டவர்கள்.
இவர்களின் அடையாளம் Facial Recognition System உள்பட பிற தொழில்நுட்பங்களின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 20ம் தேதி நடந்த வன்முறையில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்று விசாரிக்கப்பட்டு வருகிறது'' என கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+