அடேங்கப்பா.. பேசியே மயக்கிய பாகிஸ்தான் பெண் உளவாளி.. ராணுவ ரகசியங்களை உளறிய ஜவான்கள்.. அதிரடி கைது
Recommended Video
டெல்லி: பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஐ.எஸ்.ஐ ஏஜென்ட்டிடம் ராணுவ ரகசியங்களை பகிர்ந்து கொண்ட குற்றச்சாட்டில் ஜோத்பூர் ரயில் நிலையத்தில் 2 இந்திய ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் ராஜஸ்தானின் போக்ரானில் இருந்து தங்கள் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தபோது நடுவழியில் உளவுத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இருவருமே ஜோத்பூரிலிருந்து ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

ராஜஸ்தான் கூடுதல் இயக்குநர் ஜெனரல் உமேஷ் மிஸ்ரா இதுபற்றி கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் இரு வீரர்களும் பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்த, பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை, பகிர்ந்துள்ளது உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார்.
இரு வீரர்களும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் வழியாக பாகிஸ்தானுக்கு முக்கியமான தகவல்களை அனுப்பி வந்துள்ளனர். கைதானவர்களில் ஒருவரான ரவி வர்மா மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர், விச்சித்ரா போஹ்ரா அசாமைச் சேர்ந்தவர்.
இவர்களிடம் பாகிஸ்தான் உளவு பெண், பாகிஸ்தான் எண்ணிலிருந்து வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் (VoIP) சேவையைப் பயன்படுத்தி அழைத்து பேசி வந்துள்ளார். அந்தப் பெண் பஞ்சாபி போல ஹிந்தி உச்சரிப்பு செய்ததாக கூறப்படுகிறது.
அந்த பெண் பேசிய எண், மறுமுனையில் இந்த இரு வீரர்களுக்கும், இந்திய எண் போல செல்போன் திரையில் தோன்றுமாம். அதுபோன்ற டெக்னாலஜியை பயன்படுத்தி, உளவு பெண் பேசியுள்ளார்.
இவர்களும், இந்திய பெண் என்று நினைத்துதான் பேசியுள்ளனர். ராஜஸ்தானில் ராணுவம் அனுப்புவது, ராணுவ உபகரணங்கள் மற்றும் பிற முக்கியமான விவரங்களைப் பற்றிய முக்கியமான தகவல்களை அந்த பெண்ணுடன் இவர்கள், பகிர்ந்து கொண்டனர்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications