டெல்லி கலவரம்: முஸ்லிம்களுக்கு எதிராக சிறுவர்களை தூண்டிய ஆர்எஸ்எஸ் ஷாகா - பின்னணியில் 2 சகோதரர்கள்
டெல்லி: அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது ஜஹாங்கிர்புரியில் கலவரத்தில் ஈடுபட சிறுவர்களை ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சி முகாம் மூலம் 2 சகோதர்கள் தூண்டி விட்டிருப்பது தனியார் ஊடகம் நடத்திய நேரடி கள ஆய்வில் தெரியவந்து உள்ளது.
டெல்லி ஜஹாங்கிர்புரியில் அனுமன் ஜெயந்தியின்போது மசூதி அருகே இந்துத்துவ அமைப்பினர் தகராறில் ஈடுபட்டதால் இரு தரப்புக்கும் இடையே கலவரம் வெடித்தது.
இதனை தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இஸ்லாமியர்களின் வீடுகள் எல்லாம் ஆக்கிரமிப்புகள் என்று சொல்லி உச்சநீதிமன்ற தடையையும் மீறி புல்டோசர்களை கொண்டு இடிக்கப்பட்டன.

கைதான சுகென் சர்க்கார்
இந்த கலவரத்தை தூண்டியதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த சுகென் சர்க்கார் உட்பட 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி ஜஹாங்கிர்புரியின் ஜி பிளாக்கில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் வீடியோவில் காவி கொடியோடு அணிவகுத்த இளைஞர்களின் கைகளில் ஹாக்கி பேட்டுகள், வாள்கள், துப்பாக்கிகள் இருந்தன.

சிறுவர்களை தூண்டிவிட்டு கலவரம்
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் சகென் சர்க்காரின் சகோதரர் சுரேஷ் சர்க்கார், பஜ்ரங்தள் அமைப்பின் உறுப்பினராக இருக்கிறார். இவர் அப்பகுதியில் உள்ள சிறுவர்களை ஊர்வலத்தில் கலந்துகொள்ள வைத்து கலவரம் செய்ய தூண்டியதாக கூறப்படுகிறது. சுகென் சர்க்கார் அப்பகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆயுத பயிற்சி முகாமான ஷாகாவை நடத்தி அதில் ஏராளமான சிறுவர்களை சேர்த்து இருக்கிறார்.

சாதி அங்கீகாரத்துக்காக முஸ்லிம்கள் மீது தாக்குதல்
இதுகுறித்து 43 வயதான சுரேஷ் சர்க்காரிடம் பிரபல தனியார் இணைய ஊடகம் பேட்டியெடுத்து இருக்கிறது. அதில், "சாதியால் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வந்த நாங்கள், மற்ற இந்து வகுப்பினரிடம் உரிய அங்கீகாரம் பெறுவதற்காக பொது எதிரியான முஸ்லிம்களை தாக்கினோம்." எனத் தெரிவித்துள்ளார். "இந்த கலவரம் மூண்டது நல்ல விசயம் தான்... இல்லாவிட்டால் இந்துக்கள் எப்போது விழித்துக்கொள்வார்கள்.?" எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொலையும் செய்வேன்
உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் சுரேஷ் சர்க்காரை தொடக்கத்தில் இந்த வழக்கில் கைது செய்த டெல்லி போலீஸ் பின்னர் விடுவித்தது. "தற்போது நான் சிறப்பான பணியை செய்ய இருக்கிறேன். அடுத்த தலைமுறையை சண்டைக்காக தயார்படுத்த உள்ளேன். தேவைப்பட்டால் கொலை செய்யவும் சொல்வேன். எல்லாம் எங்கள் மதத்திற்காக." என்று கூறியுள்ளார் சுரேஷ் சர்க்கார்.

முதல்முறை நடந்த ஊர்வலம்
டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் இதுவரை அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடத்தப்பட்டதே இல்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். முதல்முறையாக சர்க்கார் சகோதரர்களே அனுமன் சிலையை அருகே உள்ள சிறிய கோயிலில் நிறுவி இருக்கின்றனர். அதன் பின்னர் தாங்கள் நடத்தும் ஆர்.எஸ்.எஸ். ஷாகா முகாமில் பயிற்சி பெரும் இளைஞர்கள், சிறுவர்களை வைத்து இந்த ஊர்வலத்தை நடத்தி இருக்கின்றனர்.

கலவரத்துக்காக பொதுத்தேர்வு தியாகம்
இந்த ஊர்வலத்தில் வாள் ஏந்தி சென்ற சுரேஷ் சர்க்காரின் மூத்த மகன் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அனுமன் ஜெயந்தி அன்று பொதுத்தேர்வில் கலந்துகொள்ளாமல் ஊர்வலம் சென்றுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "இந்து மதத்துக்காக நான் செய்யும் சிறிய தியாகம் இது. இஸ்லாமியர்களும்தான் முஹர்ரம் பண்டிகை அன்று வாள் ஏந்தி வருகின்றனர். நாங்கள் ஏன் ஏந்தக்கூடாது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். ஷாகா முகாமில் போதனை
இதையெல்லாம் எங்கிருந்து கற்றுக்கொண்டீர்கள் என்று பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சிறுவன், "எனது தந்தையின் சகோதரர் சுகென் சாகர் 10 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சி முகாம் நடத்தி வருகிறார். அதில் கற்றுக்கொண்டேன்." என்றார். இந்த ஊர்வலத்தில் பங்கேற்று கலவரம் ஏற்பட்டவுடன் அங்கிருந்து ஓடிய 13 வயது சிறுவனிடமும் அந்த ஊடகம் பேட்டி எடுத்துள்ளது.

முஸ்லிம்களிடம் இருந்து நாட்டை காக்க வேண்டும்
அதில், "வங்கதேச முஸ்லிம்கள் எங்கள் வாள்களை கைப்பற்றிக் கொண்டனர். நான் அங்கிருந்து ஓடிவிட்டேன். முஸ்லிம்களை கண்டு அஞ்சக்கூடாது, இந்துக்களான நாங்கள் நாட்டை முஸ்லிம்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என ஷாகா பயிற்சியில் சொல்லிக் கொடுத்தார்கள்." என்று கூறினார். தனது மகன் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் என அவரது தாய் சுகன்யா ஹல்தார் தெரிவிக்கிறார்.

முஸ்லிம்களை வெறுக்கிறேன்
இந்த கலவரத்தில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் தெரிவிக்கையில், "எனது தந்தைதான் இதில் கலந்துகொள்ள சொன்னார். முஸ்லிம்கள் இந்துக்களை கொல்லும் வீடியோவை அவர் எனக்கு காட்டினார். எனது பள்ளியில் முஸ்லிம் நண்பர்கள் இருப்பார்கள். நன்றாக பழகுவார்கள். ஆனால், நான் அவர்களோடு பழக மாட்டேன். அவர்களை நான் வெறுக்கிறேன்." எனக்கூறுகிறார்.

சுகென், சுரேஷ் சகோதரர்கள் தான் எல்லாம் சொல்லிக் கொடுத்தனர்
16 வயதான சிறுவன் தெரிவிக்கையில், "ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சிக்கு நான் விரும்பி செல்வேன். அது ஒரு இந்துவாக எனக்கு தன்னம்பிக்கை தருகிறது. சுகென் மற்றும் சுரேஷ் எனக்கு சகோதரர்களை போன்றவர்கள். அவர்கள் முஸ்லிம்கள் அனைவரும் வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள்' என்று கூறினர். முஸ்லிம்கள் அனைவரும் ஜெய் ஸ்ரீராம் சொல்ல வேண்டும், இல்லாவிட்டால் நாட்டைவிட்டே வெளியேற வேண்டும். முஸ்லிம்களை தடுத்து நிறுத்தாவிட்டால் நம் நாட்டை அவர்கள் காஷ்மீர் அல்லது பாகிஸ்தானை போல் மாற்றிவிடுவார்கள்.'என சுகென் என்னிடம் தெரிவித்தார்." என்றார்.

அடுத்த முறை நிச்சயம் கொல்வோம்
தொடர் சுரேஷ் சர்க்காரிடம் இதுகுறித்து கேட்டபோது, "முஸ்லிம்கள் எல்லா இடங்களிலும் இந்துக்களை கொல்கின்றனர். எனது மகன் மதத்துக்காக யாரையும் கொலை செய்வான். நான் மதத்துக்காக உயிர் தியாகம் செய்வேன். இந்த ஊர்வலத்தை விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பின் உள்ளூர் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். இம்முறை கூட்டம் குறைவாக இருந்ததால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. அடுத்த முறை நாங்கள் கொலை செய்வதை நீங்கள் காண்பீர்கள்." என்றார்.

போலி வீடியோக்கள், மீம்கள் மூலம் அச்ச உணர்வு
அதே நேரம் டெல்லி ஆர்.எஸ்.எஸ். செயற்குழு உறுப்பினர் ராஜிவ் துலி, சுகென் மற்றும் சுரேஷ் சகோதரர்கள் தங்கள் அமைப்பில் இல்லை என்றும், ஆனால் அவர்கள் உதவிகளை செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஜஹாங்கிர்புரி கலவரத்தில் பங்கேற்ற சிறுவர்கள் மத்தியில் இஸ்லாமியர்கள் குறித்த அச்ச உணர்வும், வெறுப்புணர்வும் ஊட்டப்பட்டு இருப்பதாகவும், போலியான வீடியோக்கள், மீம்ஸ்கள், ஃபார்வேடு மெசேஜ்கள் அவர்களை மாற்றி இருப்பதாகவும் ஊடகம் தெரிவிக்கிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications