புகை மண்டலமாக மாறிய டெல்லி.. வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு! விதியை மீறினால் ரூ.10,000 அபராதமாம்
டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சுமார் 2 கோடி பேர் கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி ஜனவரி மாதம் வரை வழக்கமாக டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கும். அதேபோல இந்த முறையும் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. பொதுவாக காற்றில் மாசு 201-300 வரை இருந்தால் அது மோசமான, சுவாசிக்க ஏற்றத்தக்கதாக அல்லாத காற்றாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் டெல்லியில் தற்போது 400ஐ தாண்டி காற்று மாசு பதிவாகியுள்ளது. இதனால் மருத்துவமனையை நோக்கி படையெடுப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

டெல்லியின் லோதி சாலை, ஜஹாங்கிர்புரி, ஆர்கே புரம் மற்றும் ஐஜிஐ ஏர்போர்ட் போன்ற இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசனமான அளவில் பதிவாகியுள்ளது. நிலைமையை சமாளிக்க லோதி சாலை பகுதியில் டெல்லி மாநகராட்சி சார்பில் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில், செக்டார் 62, செக்டார் 1 மற்றும் செக்டார் 116 ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் மோசமான அளவில் பதிவாகியுள்ளது.
மாசு மேலும் அதிகரிக்காமல் இருக்க BS3 மற்றும் BS4 வாகனங்கள் டெல்லிக்குள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி எனப்படும் கேஸ் மூலமாக இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உத்தரப் பிரதேசத்திலிருந்து டெல்லிக்குள் BS3 மற்றும் BS4 வாகனங்கள் வருவதால் காற்று மாசு அதிகரிக்கும் அபாயம் எழுந்திருக்கிறது. உத்தரப் பிரதேச அரசு இதை தடுக்க வேண்டும் என்று டெல்லி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல சாலையில் செல்லும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை 50% குறைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
காற்றின் வேகம் குறைவாக இருப்பதாலும், மழை இல்லாததாலும் டெல்லியில் உள்ள காற்று மாசு தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருகிறது. டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதால் காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். காற்று மாசு காரணமாக சுமார் 2 கோடி மக்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 50% பேரை வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த பிரச்னையை சரி செய்ய முதலமைச்சர் அரவிந்த் ஜெக்ரிவால் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று கூட்டப்பட்டது. அதில், தொடக்கப் பள்ளி மாணவர்கள் தொடங்கி 11ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களுக்கும் வரும் 11ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் வழக்கம் போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடப் பணிகள் மேற்கொள்ளவும், கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழையவும் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக பதிவெண் அடிப்படையில் ஒற்றைப்படை, இரட்டைப்படை என வாகனங்கள் இயங்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications