பாஜக VS காங்கிரஸ்.. யாருக்கு வெற்றி? 48 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நிலவரம் என்ன? இதோ டேட்டா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மகாராஷ்டிராவில் உள்ள நாந்தெட் மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய 2 லோக்சபா தொகுதிகளுக்கும், 13 மாநிலங்களில் உள்ள 48 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல்களிலும் உத்தரபிரதேசம், பீகாரில் பாஜகவின் கையே ஓங்கி இருக்கிறது. கர்நாடகா மற்றும் கேரளாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் அனைத்து தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியும், ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல, 13 மாநிலங்களில் உள்ள 48 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மகாராஷ்டிராவில் உள்ள நாந்தெட் மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய 2 லோக்சபா தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

election results 2024 palakkad by election results palakkad by poll results

48 சட்டசபை தொகுதிகளில் வெற்றி நிலவரம்:

சத்தீஸ்கர் ராய்ப்பூர் நகரம் தெற்கு தொகுதி - பாஜக வெற்றி
குஜராத் வேவ் தொகுதி - பாஜக வெற்றி
கர்நாடகா சிக்காவ் தொகுதி - காங்கிரஸ் வெற்றி
கர்நாடகா சாந்தூர் தொகுதி - காங்கிரஸ் வெற்றி
கர்நாடகா சென்னப்பேட்டா - காங்கிரஸ் வெற்றி

கேரளா பாலக்காடு தொகுதி - காங்கிரஸ் வெற்றி
கேரளா செலக்கரா தொகுதி - சிபிஎம் வெற்றி
மத்திய பிரதேசம் விஜயாபூர் தொகுதி - காங்கிரஸ் வெற்றி
மத்தியபிரதேசம் புத்னி தொகுதி - பாஜக முன்னிலை

மேகாலயா காம்பெக்ரே தொகுதி - தேசிய மக்கள் கட்சி வெற்றி
பஞ்சாப் தேரா பாபா நானக் தொகுதி - ஆம் ஆத்மி வெற்றி
பஞ்சாப் சாப்பெவால் தொகுதி - ஆம் ஆத்மி வெற்றி
பஞ்சாப் சித்தர்பாகா தொகுதி - ஆம் ஆத்மி வெற்றி
பஞ்சாப் பர்னாலா தொகுதி - காங்கிரஸ் வெற்றி

ராஜஸ்தான் ஜுன்ஜுனு தொகுதி - பாஜக வெற்றி
ராஜஸ்தான் ராம்கார் தொகுதி - பாஜக வெற்றி
ராஜஸ்தான் தவுசா தொகுதி - காங்கிரஸ் வெற்றி
ராஜஸ்தான் டியோலி யுனியரா தொகுதி - பாஜக வெற்றி

ராஜஸ்தான் கின்ஸ்வார் தொகுதி - பாஜக வெற்றி
ராஜஸ்தான் சாலும்பெர் தொகுதி - பாஜக வெற்றி
ராஜஸ்தான் கோரசி தொகுதி - பாரத் ஆதிவாசி கட்சி வெற்றி
சிக்கிம் சோரெங்க் - சாகுங் தொகுதி - சிக்கிம் கிராந்திகாரி மோச்சா கட்சி வெற்றி
சிக்கிம் நாம்ச்சி - சிங்கிதங் தொகுதி - சிக்கிம் கிராந்திகாரி மோச்சா கட்சி வெற்றி

உத்தரபிரதேசம் மீராப்பூர் தொகுதி - ராஷ்டீரிய லோக் தளம் வெற்றி
உத்தரபிரதேசம் குண்டார்கி தொகுதி - பாஜக வெற்றி.
உத்தரபிரதேசம் காசியாபாத் தொகுதி - பாஜக வெற்றி
உத்தரபிரதேசம் கைர் தொகுதி - பாஜக வெற்றி
உத்தரபிரதேசம் காரல் தொகுதி - சமாஜ்வாடி கட்சி வெற்றி

உத்தரபிரதேசம் சிசாமாவ் தொகுதி - சமாஜ்வாடி கட்சி வெற்றி
உத்தரபிரதேசம் புல்புர் - பாஜக வெற்றி
உத்தரபிரதேசம் காத்தேகாரி - பாஜக வெற்றி
உத்தரபிரதேசம் மஜாவான் தொகுதி - பாஜக வெற்றி
உத்தரகாண்ட் கேதர்நாத் தொகுதி - பாஜக வெற்றி

மேற்கு வங்கம் சிடை தொகுதி - திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி
மேற்குவங்கம் மதரிகாத் தொகுதி - திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி
மேற்குவங்கம் நைகாட்டி தொகுதி - திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி
மேற்கு வங்கம் ஹரோரா தொகுதி - திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி
மேற்கு வங்கம் மேதினிப்பூர் தொகுதி - திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி
மேற்கு வங்கம் டால்டங்க்ரா தொகுதி - திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி

அசாம் தோலை தொகுதி - பாஜக முன்னிலை
அசாம் பேகாலி - பாஜக வெற்றி
அசாம் சித்லி தொகுதி - தேசிய மக்கள் கட்சி வெற்றி
அசாம் போங்கைகாவ் - அசோம் கானா பரிசத் வெற்றி
அசாம் சாமவ்குரி - பாஜக முன்னிலை
பீகார் தராரி தொகுதி - பாஜக வெற்றி
பீகார் ராம்கார் தொகுதி - பாஜக வெற்று
பீகார் இமாகாஞ் தொகுதி - ஹிந்துஸ்தானி அவார்ம் மோச்சா வெற்றி
பீகார் பெலகாஞ்சி தொகுதி - ஜனதா தளம் வெற்றி

2 லோக்சபா தொகுதி வெற்றி நிலவரம்:

* மகாராஷ்டிரா நாந்தெட் தொகுதி - பாஜக முன்னிலை
* கேரளா வயநாடு தொகுதி - காங்கிரஸ் வெற்றி
இடைத்தேர்தல் தொகுதிகள்: உத்தரபிரதேசம் (9 தொகுதிகள்), ராஜஸ்தான் (7), மேற்கு வங்கம் (6), அசாம் (5), பஞ்சாப் (4), பீகார் (4), கர்நாடகா (3), கேரளா (2), மத்திய பிரதேசம் (2), சத்தீஸ்கார், குஜராத், உத்தரகாண்ட், மேகாலயாவில் தலா 1 என இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் பெரும்பாலானவை எம்.எல்.ஏக்களாக இருந்தவர்கள், எம்பி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் காலியானவை ஆகும்.

அண்மையில் முடிந்த ஹரியானா தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட தடுமாறின. இதனால், பாஜக வெற்றிக்கனியை பறித்தது. உத்தர பிரதேச சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கும் பெரிதாக உடன்பாடு எட்டப்படவில்லை. சமாஜ்வாடி கட்சி 9 இடங்களிலும் தனித்து போட்டியிடுகிறது.

பாஜக 9க்கு 6-ல் வெற்றி: உத்தர பிரதேசத்தில் கதேரி, கர்ஹால், மீராப்பூர் குண்டர்கி, புல்பூர், சிசாமு, காசியாபாத், மஜ்ஹவான் மற்றும் காஹிர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் 8 தொகுதிகளில் எம்.எல்.ஏக்களாக இருந்தவர்கள் எம்பி தேர்தலில் வெற்றி பெற்றதால் நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் 9 சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடந்த நிலையில் 6 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. சமாஜ்வாடி கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றது.

பிரசாந்த் கிஷோர்: முதன்முறையாக தேர்தலில் களம் கண்ட பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி போட்டியிட்ட 4 இடங்களிலும் தோல்வியடைந்துள்ளது. . கர்நாடகாவை பொறுத்தவரை சென்னபட்டனா தொகுதியில் நிகில் குமாராசாமி களமிறங்கி தோல்வியை சந்தித்துள்ளார். எச்.டி தேவகவுடா, லோக்சபா தேர்தலில் வென்றதால் இந்த தொகுதி காலியானது. அதேபோல, ஷிக்கோன் மற்றும் சந்தூர் ஆகிய சட்டசபை தேர்தல்களிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. கர்நாடகாவில் 3 சட்டசபை இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

கேரளாவில் காங்கிரஸ் வெற்றி: வயநாடு லோக்சபா தொகுதி: கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார். பாலக்காடு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. செலக்காரா தொகுதியில் சிபிஎம்(மார்க்சிஸ்ட்) வேட்பாளர் பிரதீப் வெற்றி பெற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+