சர்ச்சையை கிளப்பிய.. ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு 2 தேசிய விருதுகள்.. இயக்குநருக்கு ஜாக்பாட்
டெல்லி: நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இஸ்லாமியர்களின் கடும் எதிர்ப்பை சம்பாதித்த இந்த திரைப்படம் தமிழகம் உள்பட பல மாநிலங்களிலும் சர்ச்சையை கிளப்பியது. திரையரங்குகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் அந்த படத்துக்கு 2 தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் சினிமாத்துறையை பொறுத்தவரை தேசிய விருது தான் உயரிய விருதாக உள்ளது. சிறந்த நடிகர், நடிகைகள், திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்குநர் என்று ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் 71வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. 2023ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் அடிப்படையில் இந்த விருது அறிவிக்கப்பட்டது.
அதன்படி கேரளா உள்பட இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. அந்த படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென்னுக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதும், படத்தின் ஒளிப்பதிவாளர் பிரசந்தனு மொஹபத்ராவுக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது.
இந்த திரைப்படம் அடா சர்மா, சித்னி இட்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். கேரளாவைச் சேர்ந்த 4 பெண்கள் நர்சிங் கல்லூரியில் படிக்கின்றனர். விடுதியில் அவர்கள் ஒரே அறையில் தங்குகின்றனர். அதில் ஒருவர் இஸ்லாமியர். அவர் 3 பேரிடமும் இஸ்லாம் பற்றி பேசி மூளைச்சலவை செய்கிறார். இதில் 2 பேர் மதமாற்றம் அடைகின்றனர். அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்காக சிரியா போன்ற நாடுகளுக்கு கடத்தி ஒப்படைக்கும் முயற்சி பலித்ததா? இல்லையா? என்பது தான் திரைப்படமாகும்.
மேலும் இது உண்மை கதை எனவும், கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டனர் என்றும் டிரெயிலரில் தெரிவிக்கப்பட்டது. இந்த திரைப்படம் கேரளாவில் சர்ச்சையை கிளப்பியது. படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியது. இஸ்லாமியர்கள் கொதிப்படைந்தனர்.
அதேபோல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இந்த திரைப்படம் சர்ச்சையை கிளப்பிய நிலையத்தில்சிறந்ந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு என 2 பிரிவுகளில் ‛தி கேரளா ஸ்டோரி' தேசிய விருது வென்றுள்ளது கவனிக்கத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications