அகவிலைப்படி உயர்வு அதிரடி குறைப்பு.. 7 ஆண்டில் இப்படி நடந்ததே இல்லை! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக்
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை இன்று 2 சதவீதம் வரை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்மூலம் அகவிலைப்படி உயர்வு எப்போது எப்போது என கேட்டு வந்த மத்திய அரசு ஊழியர்களின் தலையில் மத்திய அரசு இடியை இறக்கி உள்ளது. ஏனென்றால் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு என்பது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசு பணிகளில் சேர்ந்தால் டிஏ எனும் அகவிலைப்படி (DA or Dearness Allowance)என்பது ஒவ்வொரு 6 மாதத்துக்கும் ஒருமுறை உயர்த்தி வழங்கப்படும். அதன்படி ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி என்பது கிடைக்கும்.
இந்த நிலையில் தான் 2025 ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வையை வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் வரை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ஏப்ரல் 1 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு செயல்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 53 சதவீதம் வரை அகவிலைப்படி உள்ள நிலையில் தற்போது அதன் சதவீதம் 55 ஆக அதிகரித்துள்ளது.
இந்த 2 சதவீத அகவிலைப்படி உயர்வின்படி மத்திய அரசு ஊழியர் ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ.18 ஆயிரம் எனும் போது அவருக்கு மாதம் ரூ.360 வரை கிடைக்கும். அப்படி பார்த்தால் ஒரு ஆண்டில் ரூ.4,320 வரை கிடைக்கும் அதேபோல் ஓய்வூதியதாரர்களை எடுத்து கொண்டால் அடிப்படை பென்சன் ரூ.9 ஆயிரமாக இருக்கும்போது அவர்களுக்கு மாதம் ரூ.180 அதிகரிக்கும். இதன்மூலம் பார்த்தால் ஆண்டுக்கு ரூ.2,160 வரை கூடுதலாக கிடைக்கும்.
இதன்மூலம் மொத்தம் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் பலன் பெற உள்ளனர். 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலன் பெற உள்ளனர். இருப்பினும் வரை இந்த அகவிலைப்படி உயர்வு என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை விட சோகத்தை தான் தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஏனென்றால் மத்திய அரசு ஊழியர்கள் 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் மத்திய அரசு 2 சதவீதம் வரை மட்டுமே உயர்த்தி உள்ளதால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் கடந்த ஆண்டு கடைசியாக 3 சதவீதம் வரை அகவிலைப்படி என்பது உயர்த்தப்பட்டது. தீபாவளியையொட்டி அந்த அறிவிப்பு வெளியானது. இதனால் இந்த முறையும் அகவிலைப்படி 3 சதவீதம் அல்லது 4 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஹோலிக்கு முன்பாக இந்த அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பை மத்திய அரசு பூர்த்தி செய்யவில்லை. ஏனென்றால் கடந்த 2018ம் ஆண்டு ஜுலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி என்பது குறைந்தப்டசம் 3 சதவீதம் அல்லது 4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் இப்போது 2 சதவீதம் மட்டுமே அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் வருத்தமடைந்துள்ளனர். இருப்பினும்2 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்கள் ஏற்று கொள்ள உள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications