இந்தியாவில் ஒரே நாளில் 20,279 பேருக்கு கொரோனா. . உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்தது!
டெல்லி : இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 21,411 ஆக இருந்த நிலையில், இன்று இந்த எண்ணிக்கை 20,279 ஆக மேலும் குறைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது.
அப்போது குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது கடந்த ஜூன் மாதத்தில் இருந்து படிப்படியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது கடந்த சில நாட்களாக ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை குறைதலும், கூடுதலுமாகவே இருந்து வருகிறது.

கொரோனா வைரஸ்
உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவே கருதப்படுகிறது. எனினும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கையாளப்படாததாலேயே கொரோனா பாதிப்பு மாறி மாறி பதிவாகி வருகிறதாக கூறப்படுகிறது. நிதிநகரான மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் அதிகமாகி வரும் நோய்தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

குறைந்து வரும் பாதிப்பு
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதிலும் 20,279 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்று மற்றும் நேற்று முன்தின பாதிப்புகளை விட குறைவாகும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், மீண்டும் பாதிப்பு சிறிது சிறிதாக அதிகரித்து வந்ததது. தற்போது கடந்த 3 நாட்களாக இந்த பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் படிப்படியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 21,411 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை கோடியே 38 லட்சத்து 88 ஆயிரத்து 755 ஆக உள்ளது.

பலி எண்ணிக்கை
அதேபோல் கொரோனா காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 67 பேர் பலியாகி இருந்த நிலையில், ஒரேநாளில் பலி எண்ணிக்கை அதில் பாதியாக குறைந்துள்ளது மக்கள் மத்தியில் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. இன்றை பலியின் மூலம் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 33 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா மரணங்கள் 50 தாண்டியே பதிவாகி வந்த நிலையில், இன்று அதற்கு பாதியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா சிகிச்சையில்...
இதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 18,143 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 726 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இன்று இந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. நாட்டில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,52,200 ஆக உள்ளது.
Recommended Video

தடுப்பூசி அளவு
இதேபோல் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில் தடுப்பூசி போட்டுக்க்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒரே நாளில் 28,83,489 பேர் தடுப்பூசி போட்டுக்க்கொண்டுள்ளது. இதுவரை 201 கோடியே 99 லட்சத்து 33 ஆயிரத்து 453 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா தொற்று பரவலை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 83 ஆயிரத்து 657 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications