டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சதாப்தி ரயிலில் பயணம் செய்த நபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. குறுஞ்செய்தியால் திடுக்.. 20 பயணிகள் தனிமை

Google Oneindia Tamil News

டெல்லி: டேராடூன் ஜன சதாப்தி விரைவு ரயிலில் பயணம் செய்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக குறுஞ்செய்தி வந்த நிலையில் அந்த ரயிலில் பயணம் செய்த 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ஷியாம்பூரை சேர்ந்தவர் 48 வயது மதிக்கத்தக்க நபர். இவர் நொய்டாவில் உள்ள பேட்டரி உற்பத்தி நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் காசியாபாத்திலிருந்து டேராடூன் செல்லும் ஜன் சதாப்தி விரைவு ரயிலில் ஞாயிற்றுக்கிழமை மதியம் பயணம் செய்தார்.

இவருக்கு அவர் பணியாற்றும் நிறுவனத்திலேயே கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகும் முன்பே இவர் சதாப்தி ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது இவருக்கு கொரோனா உறுதியானதாக குறுஞ்செய்தி செல்போனுக்கு வந்தது.

திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 52 பேருக்கு கொரோனா - 24 பேர் டிஸ்சார்ஜ் திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 52 பேருக்கு கொரோனா - 24 பேர் டிஸ்சார்ஜ்

ரூர்கி

ரூர்கி

இதையடுத்து அவர் இலவச எண் மூலம் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தார். இந்த தகவல் கிடைத்த போது அவர் ஹரித்வார் மாவட்டம் ரூர்கி அருகே ரயிலில் சென்றுக் கொண்டிருந்தார்.

மருத்துவமனை

மருத்துவமனை

இதையடுத்து ஹரித்வாரில் உள்ள மேலா மருத்துவமனையில் அந்த நபர் அனுமதிக்கப்பட்டார். அவருடன் பயணம் செய்த 22 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டனர். அந்த நபருக்கு அறிகுறி இல்லாமலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ரயில்வே அதிகாரிகள்

ரயில்வே அதிகாரிகள்

பொதுவாக கொரோனா சளி மாதிரி எடுக்கப்பட்ட நபர் முடிவுகள் வரும் வரை அங்கும் இங்கும் செல்லாமல் தனிமையில் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் நிலையில் அவர் ரயிலில் பயணம் செய்ய யார் அனுமதிக் கொடுத்தது என ரயில்வே அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

விசாரணை

விசாரணை

நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் அந்த நிறுவனம் பயணம் செய்ய இவரை எப்படி அனுமதித்தது, அவர் எப்படி ரயிலில் பயணம் செய்தார் என்ற கேள்விகளை ரயில்வே நிர்வாகம் எழுப்பியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

English summary
20 Train passengers quarantined after a man has tested Corona virus positive while his journey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X