2 மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி வீரர்கள்.. இந்தியா இழப்பீடு கோரலாம்.. சர்வதேச தீர்ப்பாயம் அதிரடி!
டெல்லி: கேரளா மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி கடற்படை வீரர்களுக்கு எதிரான வழக்கில் உயிரிழந்தவர்களுக்காக இந்தியா இழப்பீடு கோரலாம் என்று சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களை இந்திய நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்று சர்வதேச தீர்ப்பாயம் கூறியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த இரண்டு மீனவர்களை இந்திய கடற்பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு இத்தாலி கடற்படை வீரர்கள் இரண்டு பேர் சுட்டுக்கொன்றனர். என்ரிகா லெக்சி என்ற இத்தாலி நாட்டு சரக்குக் கப்பலில் இருந்த சால்வாட்டர் கிரோன் மற்றும் மாசிமிலியானோ லாட்டோர் என்ற இரண்டு கடற்படை வீரர்கள்தான் இந்த குற்றத்தை செய்தது.

கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஜெலஸ்டைன், அஜீஸ் பிங்கு இருவரும் இதில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் இந்திய கடல் எல்லையில் நடந்தது என்று இந்தியா குற்றஞ்சாட்டியது.
அதே சமயம் இந்த சம்பவம் இந்திய கடல் எல்லைக்கு வெளியே நடத்ததாக இத்தாலி கூறியது. இந்த வழக்கில் சால்வாட்டர் கிரோன் மற்றும் மாசிமிலியானோ இருவரும் இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இதில் மாசிமிலியானோ உடல் நலக்குறைவு காரணமாக இத்தாலிக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அதன்பின் ஐநா அழுத்தம் காரணமாக 2016ல் சால்வாட்டர் விடுதலை செய்யப்பட்டார்.
இவர்களை முறையாக கைது செய்யவும் இந்தியாவில் விசாரிக்கவும் இந்தியா சர்வதேச தீர்த்தபாயத்தில் முறையிட்டது. இதில் கொல்லப்பட்டவர்கள் இரண்டு பேரும் இந்தியர்கள். அதனால் குற்றம் செய்தவர்களை இந்திய கோர்ட்டில் விசாரிக்க வேண்டும் என்று இந்தியா முறையிட்டது.
அதேபோல் இந்த சம்பவம் இந்திய நீர் பகுதியில் நடந்ததாக இந்தியா முறையிட்டது. ஆனால் இதை இத்தாலி எதிர்த்தது. இந்த சம்பவம் சர்வதேச கடல் எல்லையில் நடந்தது என்று இத்தாலி கூறியது. இந்த வழக்கு மீதான விசாரணை சர்வதேச தீர்ப்பாயத்தில் நடந்து முடிந்துள்ளது. இதன் விசாரணை முடிந்த நிலையில் தற்போது சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பளித்து உள்ளது.
அதன்படி கேரளா மீனவர்களை சுட்டுக்கொண்ட இத்தாலி கடற்படை வீரர்களுக்கு எதிரான வழக்கில் உயிரிழந்தவர்களுக்காக இந்தியா இழப்பீடு கோரலாம் என்று சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியா தனது மீனவர்களை இழந்துள்ளது என்பதால் அதற்கு இத்தாலியிடம் இந்தியா இழப்பீடு கோரலாம் என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது .
ஆனால் சர்வதேச ஐநா சட்டப்படி இந்தியா இத்தாலி வீரர்களை இந்திய நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது, அவர்களை கைது செய்ய முடியாது என்று சர்வதேச தீர்ப்பாயம் கூறியுள்ளது. இவர்களை கைது செய்து இந்தியா கொண்டு வர மத்திய அரசு முயன்றது. ஆனாலும் இந்த வழக்கில் இந்த தீர்ப்பு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications