அது இந்திய ராணுவம் இல்லை.. மோடியின் சேனை.. சொல்லுங்க.. சர்ச்சையை ஏற்படுத்திய ஆதித்யநாத்!
இந்தியா ராணுவம் பிரதமர் மோடியின் சேனை என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசி இருக்கிறார்.
Recommended Video

டெல்லி: இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சேனை என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசி இருக்கிறார்.
லோக்சபா தேர்தலுக்காக நாடு முழுக்க கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகிறது. வடமாநிலங்களில் பாஜக மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்தநிலையில்தான் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியது ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் இன்று டெல்லி காசியாபாத்தில் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் மேற்கொண்டார்.

யோகி பிரச்சாரம்
டெல்லி பிரச்சாரத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசும் போது, காங்கிரஸ் தீவிரவாதிகளை ஆதரித்தது. அவர்களை ஜி என்று மரியாதையாக அழைத்தது. தீவிரவாதிகளுக்கு காங்கிரஸ் கட்சி பிரியாணி கொடுத்தது. அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது.

மோடி என்ன
ஆனால் மோடியின் சேனையான ராணுவம் அப்படி இல்லை. மோடியின் சேனை தீவிரவாதிகளுக்கு குண்டுகளையும், தோட்டாக்களையும் அளித்தது. மோடியின் சேனை தீவிரவாத முகாம்களை அழித்தது. காங்கிரஸ் முடியாது என்று நினைத்த விஷயங்களை நாங்கள் முடித்து காட்டி இருக்கிறோம் என்று கூறினார்.

எதிர்ப்பு
யோகி ஆதித்யாநாத்தின் இந்த பிரச்சாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய ராணுவத்தை அவர் அவமானப்படுத்திவிட்டார். அவர்கள் ராணுவத்தை தங்களின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்வது மிக மிக தவறு. பாஜக மிகவும் தவறான வழியில் இயங்குகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி இருக்கிறது.

இப்படியா?
அதேபோல் பாஜக புல்வாமா தாக்குதல் தொடங்கி பாகிஸ்தான் மீதான தாக்குதல் வரை அனைத்து ராணுவ நடவடிக்கைகளை தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறது. இதைவிட இந்திய ராணுவத்திற்கு பெரிய அவமானம் இருக்க முடியாது. இந்தியா ராணுவத்தை பாஜக அவ்வளவு கீழ்த்தரமாக நினைக்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications