டெல்லியில் பாஜகவுக்கு 7க்கு 7 "க்ளீன் ஸ்வீப்.." தேசிய தலைநகரில் வென்றவர்கள் யார்! முழு விவரம்
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் தலைநகர் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளையும் பாஜக மொத்தமாகக் கைப்பற்றியது. இந்த ஏழு தொகுதிகளில் எந்த வேட்பாளர்கள் வென்றனர்... அவர்கள் எத்தனை வாக்குகளைப் பெற்றனர் என்பது குறித்துப் பார்க்கலாம்.
நமது நாட்டில் லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. எக்ஸிட் போல் முடிகள் பாஜகவுக்கு மிக பெரிய வெற்றி கிடைக்கும் எனக் கூறியிருந்த நிலையில், அக்கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை.

லோக்சபா தேர்தல் முடிவுகள்: அதேநேரம் பாஜக 240 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. என்டிஏ மற்றும் ஜேடியு கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த லோக்சபா தேர்தலில் சில மாநிலங்களில் பாஜகவுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. அதில் முக்கியமான டெல்லி. அங்கு மொத்தம் ஏழு தொகுதிகள் இருக்கும் நிலையில், ஏழு தொகுதிகளிலும் பாஜகவே வென்றுள்ளது. டெல்லியில் 7 தொகுதிகள் மட்டுமே இருந்தாலும் கூட கடந்த காலங்களில் டெல்லியில் ஆதிக்கம் செலுத்தும் தொகுதிகளே மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ளன. இந்த முறையும் அதே டிரெண்ட் தொடர்வது போலவே தற்போதைய சூழல் இருக்கிறது.
தலைநகர் டெல்லி: ஏழு எம்பி சீட்களை கொண்ட டெல்லியில் 53.73 சதவீத வாக்குகள் பதிவாகின.. இங்குள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்ட நிலையில், இந்தியாக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் முறையே நான்கு மற்றும் மூன்று இடங்களில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியது.
பெரும்பாலான எக்ஸிட் போல்களில் டெல்லியில் பாஜக ஆதிக்கம் தொடரும் என்றே கூறப்பட்டு இருந்த நிலையில், அதைத் தான் நடந்துள்ளது. நமது தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் வென்ற வேட்பாளர்கள் குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.
வெற்றி பெற்றவர்கள் விவரம்:
வட மேற்கு டெல்லி- யோகல் சாண்டோலியா (பாஜக)- பெற்ற வாக்குகள் 8,66,483
வடகிழக்கு டெல்லி- மனோஜ் திவாரி (பாஜக) பெற்ற வாக்குகள் 8,24,451
சாந்தினி சௌக்- பிரவீன் கண்டேல்வால் (பாஜக)- பெற்ற வாக்குகள் 5,16,496
புது டெல்லி- பன்சூரி ஸ்வராஜ் (பாஜக)- பெற்ற வாக்குகள் 4,53,185
மேற்கு டெல்லி- கமல்ஜீத் செஹ்ராவத் (பாஜக)- பெற்ற வாக்குகள் 8,42,658
தெற்கு டெல்லி- ராம்வீர் சிங் பிதுரி (பாஜக)- பெற்ற வாக்குகள் 6,92,832
கிழக்கு டெல்லி- ஹர்ஷ் மல்ஹோத்ரா (பாஜக)- பெற்ற வாக்குகள் 6,64,819












Click it and Unblock the Notifications