சரியா போச்சு.. பாஜக NDA கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த முறை ஜெயித்ததே 29 தொகுதிகளில்தான்!
டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் அமைந்துள்ள என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனையில் மொத்தம் 38 கட்சிகள் பங்கேற்றன. இந்நிலையில் தான் பாஜகவை தவிர்த்து 37 கட்சிகள் கடந்த முறை மொத்தம் 29 தொகுதிகளில் மட்டும் தான் ஜெயித்துள்ளன. இதில் அதிமுக உள்ளிட்ட 7 கட்சிகள் ஒரு எம்பிக்களையும், 9 கட்சிகள் தேர்தலில் போட்டியிடாத நிலையில் மொத்தம் 25 கட்சிகளுக்கு எம்பிக்களே இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்துள்ளன. இந்த கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இந்த கூட்டணிக்கு Indian National Developmental Inclusive Alliance (I-N-D-I-A) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் மொத்தம் 38 கட்சிகள் பங்கேற்றன. தமிழகத்தில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தம்பித்துரை எம்பி, தமாகா தலைவர் ஜிகே வாசன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி உள்பட மேலும் சிலர் பங்கேற்றனர்.
38 கட்சிகள்: கடந்த 1998 ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் 24 கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கிய நிலையில் அதனை ஒப்பிடும்போது தற்போது 14 கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது பிரதமர் மோடியின் தேசிய ஜனநாயக கூட்டணியில் 38 கட்சிகள் உள்ளன. இந்த ஆலோசனை கூட்டத்தில், ‛‛2024ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி லோக்சபா தேர்தலை சந்திக்கும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு 303 இடம்: இந்த நிலையில் தான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தற்போதைய பலம் என்ன?, ஒவ்வொரு கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் எத்தனை எம்பிக்கள் உள்ளனர்? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதாவது தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக தலைமையில் 37 கட்சிகள் இணைந்துள்ளன. இதில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 37.3 சதவீத ஓட்டுகளை பெற்று 303 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ஏக்நாத் ஷிண்டே அணி: மாறாக பாஜகவின் தற்போதைய கூட்டணி கட்சிகள் 7 சதவீத ஓட்டுகள் பெற்று 29 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. அதன்படி பார்த்தால் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவில் 13 எம்பிக்கள், லோக் ஜனசக்தி கட்சி 6 எம்பிக்கள், அனுப்ரியா படேல் தலைமையிலான அப்னாதளம் (சேனேலால்) 2 எம்பிக்களையும் மட்டுமே கொண்டுள்ளது. இதிலும் ஏக்நாத் ஷிண்டே அணியில் உள்ள எம்பிக்கள் ஒருங்கிணைந்த சிவசேனா மூலம் போட்டியிட்டு தான் கடந்த முறை வென்றனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதிமுகவுக்கு ஒரு எம்பி: இந்த கட்சிகள் தவிர கடந்த முறை பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த 7 கட்சிகள் ஒரு எம்பிக்களை மட்டுமே கொண்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக உள்ள அதிமுக, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி (என்பிபி), நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி), அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் (ஏஜேஎஸ்யு), சிக்கிம் கிராந்தி மோர்ச்சா (எஸ்கேஎம்), நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) மற்றும் மிசோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) ஆகியவை ஒரு எம்பிக்களை கொண்டுள்ளன.
ஓபிஎஸ் மகன்: இதில் அதிமுக சார்பில் தேனி நாடாளுமன்ற உறுப்பினரான ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தான் எம்பியாக உள்ளார். ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் ஓ ரவீந்திரநாத் குமாருக்கும் அதிமுகவில் இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க அவரது வெற்றியும் செல்லாது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக முக்கியம் ஏன்: இருப்பினும் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுகவுக்கு 66 எம்எல்ஏக்கள் உள்ளன. தமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாமல் திணறும் நிலையில் அதிமுகவுடனான கூட்டணி அந்த கட்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என பாஜக நம்புகிறது. இதனால் தான் நேற்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
புதிய தமிழகம்: மேலும் தற்போதைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற 9 கட்சிகள் கடந்த முறை வேட்பாளர்களை நிறுத்தாமல் அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாமலும் இருந்துள்ளன. அதன்படி பார்த்தால் மகாராஷ்டிராவின் ஜன் சுராஜ்ய சக்தி, கோவாவை தளமாகக் கொண்ட மகாராஷ்டிராவாதி கோமந்தக் கட்சி, உத்தர பிரதேசத்தின் நிர்பல் இந்தியன் ஷோஷித் ஹமாரா ஆம் தளம் (நிஷாத் கட்சி), பஞ்சாபின் சன்யுக்த் (திந்த்சா), மணிப்பூரின் குக்கி மக்கள் கூட்டணி, மேகாலயாவின் மலை மாநில மக்கள் ஜனநாயக கட்சி, ஹரியானா லோகித் கட்சி, கேரள காமராஜ் காங்கிரஸ் மற்றும் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இந்த பட்டியலில் அடங்கும்.

பாமக: மேலும் 16 கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எந்த வெற்றியையும் பெறவில்லை. இதில் பாட்டாளி மக்கள் கட்சியும் ஒன்று. இருப்பினும் இந்த கட்சிகளுக்கு அந்தந்த மாநிலங்களில் குறிப்பிடும் வகையில் ஓட்டு வங்கி உள்ளது. அதாவது தற்போது பாஜக கூட்டணியில் உள்ள 15 கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் இல்லாவிட்டாலும் கூட அவர்கள் குறிப்பிட்ட மாநிலம், பிராந்தியங்களில் செல்வாக்குடன் உள்ளனர். இது பாஜகவின் வெற்றிக்கு கைக்கொடுக்கும் என கூறப்படுகிறது.
பாமக எம்எல்ஏக்கள்: உதாரணமாக இந்திய குடியரசுக் கட்சி அத்வாலே தலைவர் ராம்தாஸ் அத்வாலே ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார். இந்த கட்சிக்கு மகாராஷ்டிராவில் 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதேபோல் அசோம் கண பரிஷத் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா எம்பி, 9 எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சி ஒரு ராஜ்யசபா எம்பி மற்றும் 5 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது.
கூட்டணி ஏன்: எஸ்பிஎஸ்பி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கட்சிக்கு உத்தர பிரதேசத்தில் 6 எம்எல்ஏக்கள் உள்ளன, ஹரியானாவின் ஜனநாயக் ஜனதா கட்சிக்கு (ஜேஜேபி) 10 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது மிகவும் கவனிக்க வேண்டியது அம்சமாகும். இதனால் தான் சிறிய சிறிய கட்சிகளாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் இல்லாவிட்டாலும் தேர்தலில் ஒவ்வொரு ஓட்டுகளும் முக்கியம் என்பதால் பாஜக இந்த கட்சிகளை தங்களுடன் இணைத்து கொண்டுள்ளது என ‛தாமரை' கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
-
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications