“ரஷ்ய ராணுவத்தில் வேலைன்னு சொல்லுவாங்க.. நம்பாதீங்க!” மத்திய அரசு எச்சரிக்கை!
டெல்லி: ரஷ்யாவில் வேலைக்கு செல்லும் இந்திய இளைஞர்கள் மூளை சலவை செய்யப்பட்டு, ரஷ்ய ராணுவத்தில் இணைக்கப்படுவதாக புகார்கள் எழுந்திருந்தன. இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தில் வேலை என்று சொல்லி அழைத்தால் போக வேண்டாம் என் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இன்று செய்தியாளை சந்தித்து பேசியிருந்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "மொத்தம் 27 இந்தியர்கள் தற்போது ரஷ்ய ராணுவத்தில் உள்ளனர். அவர்களது குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். சிக்கியிருப்பவர்களை விடுவிக்கும் விஷயத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம்.

ரஷ்ய ராணுவத்தில் சேர அழைப்பு வந்தால் தயவு செய்து அதை ஏற்க வேண்டாம். இதனை நாங்கள் ஏற்கெனவே வலியுறுத்தியிருக்கிறோம். இருப்பினும் மீண்டும் சொல்கிறோம். ஏனெனில் அவை ஆபத்து நிறைந்தவை மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் கொண்டவை. சமீபத்தில் ரஷ்ய ராணுவத்தில் புதிதாக இந்தியர்கள் இணைக்கப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. இந்த விஷயங்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்" என்று கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகம், நாடாளுமன்றத்தில் அளித்த தகவலின் படி, மொத்தம் 127 இந்தியர்கள் ரஷ்ய ஆயுதப் படைகளில் இணைந்து இருப்பதாக தெரிய வந்திருந்தது. இதனையடுத்து அங்குள்ள இந்தியர்களை மீட்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக, மொத்தம் 98 பேர் ரக்ஷயாவிலிருந்து இந்தியாவுக்கு அழைப்பு வரப்பட்டனர். இன்னும் 13 பேர் அங்கு இருப்பதாகவும், இது இல்லாமல் 12 பேர் காணாமல் போய் உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது .
உக்ரைனுடன் கடந்த 3 ஆண்டுகளாக ரஷ்யா போரிட்டு வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் லட்ச கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். ரஷ்யாவுக்கு கூடுதலாக ஆட்கள் தேவைப்படுவதால், வட கொரியாவில் இருந்து ராணுவ வீரர்களை ரஷ்யா இறக்குமதி செய்து இருந்தது. அதேபோல வேலை தேடி ரஷ்யாவுக்கு செல்லும் இந்திய இளைஞர்களும் குறி வைக்கப்பட்டனர். அவர்கள் மூளை சலவை செய்யப்பட்டு, ராணுவத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
எனவே இனி வரும் காலங்களில் ரஷ்யாவில் வேலை வாய்ப்பு இருப்பதாக ஏதேனும் தகவல் கிடைத்தால் அதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications