2ஜி கேஸ்-நெருங்கும் தீர்ப்பு? ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான அப்பீல்-டெல்லி கோர்ட் புது உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா எம்.பி, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பும் அக்டோபர் 30-ந் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக மூத்த திமுக தலைவர் ஆ.ராசா பதவி வகித்த போது 2ஜி அலைக்கற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டு ஏலத்தை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும்போது பகிரங்க ஏலம் விடாமல் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையை பின்பற்றினார். இதன் மூலம் நாட்டுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தினார் ஆ.ராசா என்பது மத்திய கணக்கு தணிக்கைக் குழுவின் குற்றச்சாட்டு. இந்த வழக்கில் 2011-ம் ஆண்டு ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட 17 கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுதலையாகினர். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஓபி ஷைனி இந்த வழக்கை விசாரித்து வந்தார். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் 2017-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

2G Case: Delhi High Court order to CBI,ED to file written final submissions

ஆனால் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக 2018-ம் ஆண்டுக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தன. இந்த மேல்முறையீட்டு மனு மீது கடந்த ஆகஸ்ட் 28-ந் தேதி முதல் தினசரி விசாரணையும் நடைபெற்று வருகிறது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார் சர்மா இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது சிபிஐ தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின், ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலையை ரத்து செய்ய வேண்டும் என்ற தங்களது மேல்முறையீட்டு மனுவை ஏற்க வேண்டும் என வாதிட்டார். இதனை நீதிபதி தினேஷ்குமார் பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த மேல்முறையீட்டு வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் எதிர்மனுதாரர்கள் சார்பில் அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமாக வாதங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்; வரும் அக்டோபர் 30-ந் தேதிக்குள் இந்த வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு அக்டோபர் 31-ந் தேதி வழக்கு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+