இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது 3 முக்கிய எக்ஸ்பிரஸ் சாலைகள்.. முழு தகவல்
டெல்லி: நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக எக்ஸ்பிரஸ்வே எனப்படும் விரைவுச்சாலைகளை அமைக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் விரைவில் 3 முக்கிய எக்ஸ்பிரஸ் சாலைகள் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன. சென்னை - பெங்களூர் விரைவுச்சாலை உள்பட 3 முக்கிய எக்ஸ்பிரஸ் சாலைகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன. இது பற்றி இங்கே பார்க்கலாம்.
நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அடிப்படையானது சாலை திட்டங்கள்தான். ஒருநகரத்தின் வளர்ச்சி என்பது அந்த நகரத்திற்கு எந்த அளவு கனெக்டிவிட்டி என்பதை பொறுத்துதான் அமையும். எனவே, தற்போது நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக எக்ஸ்பிரஸ்வே எனப்படும் விரைவுச்சாலைகளில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இதில் நடப்பு ஆண்டில் சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே, டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ்வே, டெல்லி - டேராடூன் எக்ஸ்பிரஸ்வே என 3 முக்கிய விரைவுச் சாலைகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகின்றன. அது பற்றிய முழு விவரங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.
* பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ்வே
சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டம் என்பது பெங்களூருவின் சுற்றுப்புறங்களை இணைப்பதையும், நகரத்திற்குள் போக்குவரத்தை 30% குறைக்கும் நோக்கத்திலும் கொண்டு வரப்படுகிறது. 2018 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ரூ.17,930 கோடி மதிப்பிலான பசுமை சாலை திட்டம் ஆகும். இந்த சாலையில் தற்போது 71 கிலோ மீட்டர் தூரத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளன.
இந்த சாலையானது வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுவதும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலை பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் தற்போது சென்னை - பெங்களூர் ரீச் ஆக சுமார் 6 மணி நேரத்திற்கும் மேல் ஆகக் கூடிய சூழலில் 3 மணி நேரத்தில் செல்ல முடியும். பயண நேரம் கணிசமாக குறையும் என்பதால் பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த எக்ஸ்பிரஸ்வே சாலையை வாகன ஓட்டிகளும் பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.
* டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலை
தேசிய நகர் தலைநகர் டெல்லியையும் நாட்டின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பையையும் இணைக்கும் முக்கிய சாலை திட்டமாக இது கருதப்படுகிறது. நாட்டிலேயே மிக நீளமான பசுமைவழிச் சாலை திட்டம் இதுவே ஆகும். இந்த சாலை பணிகள் 82% முடிவடைந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் முழு பணிகளும் முடிக்கப்பட்டு சாலை பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
1,386 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த சாலை டெல்லி உத்தரபிரதேஷ் ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள மேஜர் தொழில் நகரங்களை இணைக்கும் வகையில் இருக்கும். டெல்லியில் இருந்து மும்பை ஜவர்லால் துறைமுகம் வரையிலான தொலைவில் 180 கிலோ மீட்டர் வரை இந்த சாலை குறைக்கிறது. பயண நேரமும் பாதியாக குறையும். மேலும், இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு சரக்குகள் கொண்டு செல்வதற்கான செலவினங்கள் 9 சதவீதம் அளவுக்கு குறையும்.
* டெல்லி - டேராடூன் எக்ஸ்பிரஸ் சாலை:
டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் வரை இந்த சாலை அமைக்கம் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று மாதங்களில் இந்த சாலையானது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலை பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தற்போது டெல்லியில் இருந்து டேராடூன் செல்வதற்கு ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை ஆகிறது.
சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு வெறும் 2 மணி நேரத்தில் சென்று விட முடியும். சுற்றுலாப் பயணிகள் பலரும் இந்த வழித்தடத்தை பயன்படுத்துவார்கள் என்பதால் சுற்றுலாத் துறையும் மேம்பட வாய்ப்புள்ளது. பத்தாயிரம் கோடி மதிப்பீட்டில் இன்று தடை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications