டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"உடலுறவு!" மங்கி பாக்ஸ் பாதிப்பு இப்படிக் கூட பரவுமாம்.. பரபரப்பை கிளப்பிய புதிய ஆய்வு முடிவுகள்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நோயாளிகள் குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலகெங்கும் கொரோனா பாதிப்பு இப்போது தான் மெல்லக் குறைந்துள்ள நிலையில், இப்போது திடீரென மங்கி பாக்ஸ் பாதிப்பு வேகமாகப் பரவ தொடங்கி உள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே இருந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு முதல்முறையாக உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கி உள்ளது. மங்கி பாக்ஸ் உருமாறத் தொடங்கி உள்ளதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

 பாகிஸ்தானில் அசுரத்தனமான மழை.. இதுவரை 937 பேர் பலி.. 3 கோடி பேர் பாதிப்பு.. அவசர நிலை அறிவிப்பு! பாகிஸ்தானில் அசுரத்தனமான மழை.. இதுவரை 937 பேர் பலி.. 3 கோடி பேர் பாதிப்பு.. அவசர நிலை அறிவிப்பு!

 மங்கி பாக்ஸ்

மங்கி பாக்ஸ்

இந்தியாவிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மங்கி பாக்ஸ் கண்டறியப்பட்டது. கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் சிலருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதியானது. மங்கி பாக்ஸ் உறுதியானவர்களில் பெரும்பாலானோர் 21 நாட்களில் குணமடைந்துவிட்டனர். இருப்பினும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மங்கி பாக்ஸ் காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள மங்கி பாக்ஸ் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

உடலுறவு

உடலுறவு

ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் நபர்களுக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு அதிகம் ஏற்படுவதாகக் கூறப்பட்டது. இந்தச் சூழலில், இந்தியாவில் ஏற்படும் மங்கி பாக்ஸ் பாதிப்பு குறித்து நடத்திய சில முக்கிய ஆய்வு முடிவுகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டு உள்ளது. புனேவின் அமைந்துள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி மையத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் நோயாளிகள் உடலுறவு குறித்துக் கேட்கப்பட்டு இருந்தது.

 21 நாட்கள்

21 நாட்கள்

அதில் இந்தியாவில் ஏற்படும் ஐந்து மங்கி பாக்ஸ் பாதிப்புகளில் மூன்று பேர் எதிர் பாலினத்தவர் உடன் உடலுறவு வைத்துள்ளனர். அதேநேரம் மற்ற இருவர் உடலுறவு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. மேலும், அந்த ஆய்வு முடிவில், "5இல் மூன்று பேர் மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு 21 நாட்களுக்குள் எதிர் பாலினத்தவர் உடன் உடலுறவு வைத்துக் கொண்டுள்ளனர். அதேநேரம் அவர்கள் மது அல்லது போதைப் பொருள் எதையும் இந்த காலத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

ஓரினசேர்க்கை

ஓரினசேர்க்கை

அதேநேரம் மற்ற இருவர் தாங்கள் யாருடனும் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை எனக் கூறி உள்ளனர். இந்த ஐந்து பேரும் ஓரினசேர்க்கையில் ஈடுபடவில்லை என்றே கூறி உள்ளனர். மேலும், இந்த ஆய்வில் கலந்து கொண்ட ஐந்து பேரும் சமீப நாட்களில் வெளிநாடுகள் எதற்கும் செல்லவில்லை என்பதும் இங்குக் கவனிக்கத்தக்கது.

 கண்காணிக்க வேண்டும்

கண்காணிக்க வேண்டும்

இந்த அனைத்து மங்கி பாக்ஸ் நோயாளிகளும் நல்ல முறையில் நோய்ப் பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். சிலரிடம் மங்கி பாக்ஸ் பாதிப்பு அறிகுறிகள் தெரியாமல் இருக்கலாம். இருப்பினும், அவர்களுக்கும் கூட வைரஸ் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளது. எனவே, எளிதாக மங்கி பாக்ஸால் பாதிக்கப்படும் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் (MSM) மற்றும் பாலியல் தொழிலாளர்களின் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டும்.

 யாருக்கு வரும்

யாருக்கு வரும்

இந்த 5 பேரில் ஒருவருக்கு மட்டுமே பாலியல் நோய்ப் பாதிப்பு உள்ளது. மேலும், மங்கி பாக்ஸால் பாதிக்கப்பட்ட அனைவரும் பெரியம்மை வேக்சின் எடுத்துக் கொள்ளாதவர்கள். இந்த 5 பேரில் 3 பேர் ஆண்கள் இருவர் பெண்கள் ஆகும்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது. உடலுறவு காரணமாக மங்கி பாக்ஸ் பரவ வாய்ப்பு உள்ளதால், பாதுகாப்பான உடலுறவை வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஐஎம்சிஆர் இந்த ஆய்வு தன்பால் ஈர்பாளர்களுக்கு மட்டுமின்றி யாருக்கு வேண்டுமானாலும் மங்கி பாக்ஸ் ஏற்படும் என்பதைக் காட்டுவதாக உள்ளது.

English summary
ICMR new research about spread of monkeypox in India: (இந்தியா மங்கி பாக்ஸ் பாதிப்பு குறித்த முக்கிய ஆய்வுகள்) All things to know about India's Monkeypox.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X