டெல்லியில் நடந்த தசரா விழா.. தீயிட்டு கொளுத்தப்பட்ட 30 அடி உயரம் கொண்ட கரப்பான்பூச்சி பொம்மை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி ராம்லீலா விழாவில் நடந்த தசரா நிகழ்ச்சியில் ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் உள்ளிட்ட உருவ பொம்மைகளுடன் சேர்த்து 30 அடி உயர கரப்பான் பூச்சி உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. கரப்பான் பூச்சி தீயிட்டு கொளுத்தப்பட்ட இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

மத்திய அரசுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி உருவெடுத்திருக்கிறது. ஏற்கனவே நீட் தேர்வு வினாத்தாள் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வைத்த சிஜேபி கட்சியினர், தற்போது தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது கவனத்தை திருப்பி இருக்கின்றனர்.

Cockroach

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தீவிர போராட்டத்தை முன்னெடுத்தது. இம்முறை சிஜேபி கட்சியினரை காவல்துறையினர் கடுமையாக ஒடுக்கினர். அபிஜீத் தீப்கேவை விமானத்தில் வைத்தே கைது செய்தனர். பின்னர் டெல்லியில் போராட்டம் செய்ய முயன்ற போதும் கைது செய்தனர்.

இதனால் கரப்பான் பூச்சிகள் பாஜகவுக்கு தொல்லை கொடுப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பாக டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கும் தசரா விழாவில் ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் உள்ளிட்ட உருவ பொம்மைகளுடன் சேர்த்து 30 அடி உயர கரப்பான் பூச்சி உருவ பொம்மையும் எரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், பாஜக எம்எல்ஏவுமான அசோக் கோயல், இதற்கு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. கரப்பான் பூச்சி உருவ பொம்மையை எரிப்பது தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றி. தூய்மையை வலியுறுத்த செய்யப்படுகிறது என்று கூறி இருந்தார். இதுதொடர்பாக அபிஜீத் தீப்கே, இலவச விளம்பரத்திற்கு நன்றி என்று ஜாலியாக பதில் அளித்திருந்தார்.

இந்த நிலையில் ராம்லீகா மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில் 30 அடி உயரம் கொண்ட கரப்பான் பூச்சி உருவ பொம்மை தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் உருவ பொம்மைகளுக்கு முன் கரப்பான் பூச்சி பொம்மை எரிக்கப்பட்டது. இதன் வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+