38 மாவட்டங்களில் இப்பவும் 'நடமாடும்' நக்சல்கள்.. 2023-ல் 138 பேரை பலி கொண்ட மாவோயிஸ்டுகள்!
டெல்லி: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் 38 மாவட்டங்கள் இடதுசாரி தீவிரவாதத்தால் (Naxals) (Maoists) (நக்சலைட்டுகள்) (மாவோயிஸ்டுகள்) பாதிக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டாளுமன்ற ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளிக்கையில் இதனைத் தெரிவித்தார். மேலும் 2019-20 முதல் 2023-24 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், சிறப்பு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ.4350.78 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்த பதில்: தற்போது நாட்டில் 38 மாவட்டங்கள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 60 மாவட்டங்கள் இடதுசாரி தீவிரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின்படி, காவல்துறை, பொது ஒழுங்கு சம்பந்தப்பட்ட துறைகள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இருப்பினும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக உள்ளது. இடதுசாரி தீவிரவாத பிரச்சனையை முழுமையாக கையாள்வதற்காக, "இடதுசாரி தீவிரவாதத்திற்கு தீர்வு காண்பதற்கான தேசிய கொள்கை, செயல் திட்டம்" 2015-ல் அங்கீகரிக்கப்பட்டது
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய ஆயுத போலீஸ் பட்டாலியன்கள், மாநில காவல் படைகளை நவீனப்படுத்துவதற்கான பயிற்சி, ஆயுதங்கள், உபகரணங்கள், உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல், பலப்படுத்தப்பட்ட காவல் நிலையங்களை நிர்மாணித்தல் போன்றவற்றை மத்திய அரசு செய்து வருகிறது.
வளர்ச்சியைப் பொறுத்தவரை, முன்னோடித் திட்டங்கள் தவிர, இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், சாலைக் கட்டமைப்பை விரிவுபடுத்துதல், தொலைத்தொடர்பு இணைப்பை மேம்படுத்துதல், திறன், நிதி உள்ளடக்கம் ஆகியவற்றில் சிறப்பு திட்டங்களுடன் மத்திய அரசு பல்வேறு குறிப்பிட்ட முயற்சிகளை எடுத்துள்ளது.
2019-20 முதல் 2023-24 வரையிலான கடந்த 05 ஆண்டுகளில், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், சிறப்பு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ.4350.78 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சியைப் பொறுத்தவரை, கீழ்க்கண்ட குறிப்பிட்ட முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன:
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைக் கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக இதுவரை 14,529 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொலைத்தொடர்பு இணைப்பை மேம்படுத்த, 6524 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளூர் மக்களின் நிதி வசதியை மேம்படுத்த 5731 அஞ்சலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இடதுசாரி தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 30 மாவட்டங்களில் 1007 வங்கிக் கிளைகளும், 937 தானியங்கி பணம் வழங்கும் மையங்களும் திறக்கப்பட்டுள்ளன.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 46 தொழிற்பயிற்சி நிலையங்களும், 49 திறன் மேம்பாட்டு மையங்களும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பழங்குடியினரின் தரமான கல்விக்காக 178 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
அரசின் திட்டங்கள் காரணமாக, இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை 73% குறைந்துள்ளது. இடதுசாரி தீவிரவாதத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் (பாதுகாப்புப் படையினர் + பொதுமக்கள்) பெருமளவு குறைந்துள்ளது. 2023-ம் ஆண்டு 138 பேர் இடதுசாரி தீவிரவாதத்தால் உயிரிழந்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications