‘கேரளம்’ என மாறும் கேரளா.. அமளிக்கு நடுவே 4 முக்கிய சட்டங்கள் இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று 4 சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றும் சட்டத்தை இன்று லோக்சபாவில் அறிமுகம் செய்தார் மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராய்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் நீட் முறைகேடு விவகாரம், டெல்லி மாணவர் போராட்டத்தின்போது நடந்த தடியடி, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Parliament lok sabha Amit shah

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று 4 சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இதன்படி தீர்ப்பாயம் சீரமைப்பு சட்டம், சுரங்கம் கனிம வளங்கள் திருத்த சட்டம், கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றும் சட்டம் மற்றும் கூட்டுறவு வளர்ச்சி தொடர்பான தேசிய சட்டம் ஆகிய சட்டங்கள் இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

கேரளா - கேரளம்

கேரளாவின் பெயரை 'கேரளா' என்பதிலிருந்து 'கேரளம்' என அதிகாரப்பூர்வமாக மாற்றுவதற்கான கேரளா (பெயர் மாற்றம்) மசோதா 2026-ஐ இன்று மக்களவையில் மத்திய உள்விவகார துறைக்கான இணை அமைச்சர் நித்யானந்த ராய் அறிமுகம் செய்து பேசினார்.

மத்திய அமைச்சரவை கடந்த பிப்ரவரியில் இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டவுடன், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும், அவையில் கலந்துகொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். நாடாளுமன்றம் மசோதாவை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றவுடன், அது சட்டமாகும்.

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக மசோதா

உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்யவுள்ள மற்றொரு மசோதா, தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக (திருத்த) மசோதா, 2026, தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (NCDC) அதிகார வரம்பை விரிவுபடுத்த முயல்கிறது. இந்த மசோதா வரைவின்படி, பெரும்பாலும் கூட்டுறவு சங்கங்கள் மூலமான திட்டங்களுக்கு நிதியளிப்பதற்குப் பதிலாக, இந்தக் கழகம் கூட்டுறவு மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள பரந்த அளவிலான அமைப்புகளுக்கும் நிதியளிக்க முடியும்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் 16-வது நாளான இன்று (ஆகஸ்ட் 10) காலை 11 மணிக்கு அவை நடவடிக்கைகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டங்களால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடின. அப்போது, போராட்டங்களுக்கு மத்தியிலும் மக்களவையில் நான்கு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தீர்ப்பாயச் சீர்திருத்த மசோதா (2026), சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா (2026), கேரள மாநிலப் பெயர் மாற்ற மசோதா (2026) மற்றும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக திருத்த மசோதா (2026) ஆகிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான காவல் துறை நடவடிக்கை மற்றும் ராமர் கோயில் நன்கொடைகள் திருட்டு விவகாரம் குறித்து அரசிடமிருந்து பதில் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டது. இதனால் மக்களவையில் தொடர் அமளி நிலவியதால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் சில பணிகள் மேற்கொள்ளபட்டாலும், அங்கேயும் அமளி ஏற்பட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+