Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மளமளவென இடிந்த கட்டடம்.. டெல்லியில் அதிகாலையில் நடந்த சோகம்.. 4 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி முஸ்தபாபாத்தில் இன்று அதிகாலையில் திடீரென கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் கட்டடத்தில் வசித்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். மீட்பு பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் 4 பேர் இறந்துள்ளனர். இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

டெல்லி முஸ்தபாபாத் ஏரியாவில் வீடுகள் நெருக்கமாக அமைந்துள்ளது. இடபற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு வீடுகளுக்கும் இடையேயான இடைவெளி என்பது மிகவும் குறைவாக தான் இருக்கிறது.

delhi building collapses

அதுமட்டுமின்றி ஒவ்வொரு கட்டடங்களும் அடுக்குமாடி கட்டடமாக கட்டப்பட்டுள்ளன. இதனால் ஒரே கட்டடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டு பல குடும்பங்களால் தங்க முடியும்.

இந்நிலையில் தான் டெல்லி முஸ்தபாபாத் ஏரியாவில் இன்று அதிகாலையில் திடீரென்று ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது. கட்டடம் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ந்து போயினர். தூக்கத்தில் இருந்து கண்விழித்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை 7.30 மணி நிலவரப்படி 10 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் வரை இறந்துள்ளனர் என்பது சோகமான விஷயமாகும். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதால் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திடீரென்று இந்த கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. முன்னதாக நேற்று இரவு டெல்லியில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் மழையின் காரணமாக கட்டடம் இடிந்து விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+