நாடு முழுவதும் 41.64 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனைகள்... 34.46 கோடி தடுப்பூசி டோஸ்கள்!
டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 41.64 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் 34.46 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இதுவரை போடப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 97 நாட்களுக்குப் பிறகு, 5 லட்சத்திற்கும் கீழ், 4,95,533 ஆகக் குறைந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.62 சதவீதமாகும்.

நம் நாட்டில் இதுவரை 2,96,05,779 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 57,477 பேர் குணமடைந்துள்ளார்கள். தொடர்ந்து 51-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.06 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து, 2.50 சதவீதமாக உள்ளது. தினசரி தொற்று உறுதி வீதம் தொடர்ந்து 26 நாட்களாக 5 சதவீதத்திற்கும் குறைவாக, 2.35 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 41.64 கோடியாக அதிகரித்துள்ளது
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 34 கோடியைக் கடந்தது. மொத்தம் 45,60,088 முகாம்களில் 34,46,11,291 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 43,99,298 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் தொடர்ந்து 6-வது நாளாக புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமையன்று மட்டும் 44,111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 97 நாட்களுக்கு பிறகு 5 லட்சத்திற்கும் குறைவாக, 4,95,533 ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.62 சதவீதமாகும்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications