SIR சரியே.. ஞானேஷ் குமாருக்கு ஆதரவாக களமிறங்கிய 42 மாஜி நீதிபதிகள்! காங்கிரஸ் மீது ‘அட்டாக்’

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ''இந்திய தேர்தல் ஆணையத்தின் 'SIR' நடவடிக்கை சரியானது தான் என்றும், அதில் தவறு எதுவும் நடக்கவில்லை என்றும் சிலர் தங்களின் தனிப்பட்ட சுயநல அரசியல் நோக்கங்களால் இதற்கு எதிராக தவறான பிரசாரம், பேராட்டம் நடத்துகின்றனர்'' என 42 முன்னாள் நீதிபதிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின்'SIR' நடவடிக்கையை கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி டெல்லியில் 'இந்தியா' கூட்டணி கட்சி எம்பிக்கள் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

Gyanesh Kumar

அதேபோல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்று பெங்களூரில் போராட்டம் நடத்தினர். வரும் 10ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் தான் இந்திய தேர்தல் ஆணையத்தின் 'SIR' நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தும், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு ஆதரவாகவும் இந்தியாவின் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்று ஓய்வு பெற்ற 42 நீதிபதிகள் திறந்த கடிதம் ஒன்றை பொதுமக்களுக்காக எழுதி உள்ளனர்.

இந்த கடிதத்தில்உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, பங்கஜ் மிட்டல் உள்ளிட்டவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:''எங்களின் கவலை மிகவும் தீவிரமானது. இந்தியாவின் அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. அது தடுக்கப்பட வேண்டும்.

இந்த தாக்குதலின் மையப்புள்ளியாக இந்திய தேர்தல் ஆணையம் உள்ளது. நாங்கள் மிகுந்த மரியாதையுடன் கருதும் நீதித்துறை மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகள் கூட இதிலிருந்து தப்பவில்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை நிலையற்றதாக மாற்றுவதால் ஏற்படக்கூடிய பேரழிவு தரும் விளைவுகளை பற்றி சிறிதும் கவலைப்படாமல், சுயநல அரசியல் நோக்கங்களால் தூண்டப்பட்ட ஒரு திட்டமிட்ட பிரச்சாரமாகவே இது தோன்றுகிறது.

தேர்தல் ஆணையம், நீதித்துறை மற்றும் பிற அரசியலமைப்பு சார்ந்த நிறுவனங்களின் நற்பெயரை கெடுக்கும் வகையில் தொடர்ந்து பிரசாரங்கள், போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 'வாக்குத் திருட்டு' தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அதுமட்டுமின்றி திருடர்கள் என்று விமர்சனம் செய்கின்றனர். உண்மையில் இத்தகைய அமைப்புகள் பற்றி தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை என்பது சுத்தமான, துல்லியமான வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதாக உள்ளது. நம்பிக்கையே ஜனநாயகத்தின் நாணயம். தேர்தல்களின் நம்பகத்தன்மையை குறைத்து மதிப்பிடப்படும் முயற்சிகள் நாட்டில் அமைதியை உருவாக்கலாம். அதோடு அராஜக சக்திகளுக்குத் துணிச்சலை அளிக்கலாம். இது ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைத்துவிடும். தற்போதைய சூழலில் மவுனமாக இருப்பது நடுநிலையானதாக இருக்க முடியாது என்பதால் நாங்கள் இந்த கடிதத்தை எழுதி உள்ளோம்'' என கூறப்பட்டுள்ளது.

இதனால் SIR நடவடிக்கைக்கு எதிராகவும், தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தி வரும் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினர் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஆகியோரை விமர்சனம் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+