டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உ.பி., மேற்கு வங்கம், ஒடிசாவில் எந்த கட்சிகளுக்கு அதிக தொகுதி.. இந்தியா டிவி பரபர கருத்துக் கணிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: நாடே எதிர்பார்க்கக்கூடிய உத்தரபிரதேச மாநில லோக்சபா தேர்தல் முடிவுகள் உட்பட முக்கியமான சில மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி இப்போது கருத்துக் கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச வாக்காளர்கள் மன ஓட்டம் குறித்துதான் நாட்டு மக்கள் அதிகம் அக்கறைப்படுகிறார்கள்.

காரணம்.. இங்கு எந்த கட்சி அதிக தொகுதிகளை வெல்கிறதோ, அந்த கட்சி எளிதாக மத்தியில் ஆட்சியை பிடித்துவிட முடியும்.

 காங்கிரஸின் பிரமிக்க வைக்கும் வாக்குறுதிகள்.. மக்களைக் கவரவா.. இல்லை பாஜகவைக் கவிழ்க்கவா? காங்கிரஸின் பிரமிக்க வைக்கும் வாக்குறுதிகள்.. மக்களைக் கவரவா.. இல்லை பாஜகவைக் கவிழ்க்கவா?

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. பொன் முட்டையிடும் வாத்து போன்றது அந்த மாநிலம். எனவேதான், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என முக்கிய தலைவர்கள் உத்தர பிரதேசத்தில் போட்டியிட விரும்புகிறார்கள். அந்த அதிர்வு தங்கள் கட்சிக்கு பயன்படும் என்பதே இதன் பின்னணி.

கருத்துக் கணிப்பு

இந்த நிலையில்தான், இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ் ஆகியவை இணைந்து, ஒப்பினியன் போல் ஒன்றை தயாரித்துள்ளன. அதில், கிடைத்துள்ள ரிசல்ட் சுவாரசியமானதாக உள்ளது. இன்றைக்கே தேர்தல் நடைபெற்றால் யாருக்கு ஓட்டுப் போடுவீர்கள் என்ற கேள்வியை முன்வைத்துதான், இந்த கருத்துக் கணிப்பு நடைபெற்றுள்ளது.

காங்கிரஸ் பரிதாபம்

காங்கிரஸ் பரிதாபம்

இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிகபட்சமாக 46 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 2வது இடம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் அடங்கிய, மகாகட்பந்தன் கூட்டணிக்கு. அந்த கூட்டணி 30 தொகுதிகளை வெல்லக்கூடும். காங்கிரசுக்கு வெறும், 4 தொகுதிகள்தான் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தை பொறுத்தளவில் மொத்தம், 42 தொகுதிகள் உள்ளன. அதில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் 28 தொகுதிகளையும், பாஜக 12 தொகுதிகளையும் வெல்லக்கூடும். இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் தலா 1 தொகுதியில்தான் வெல்ல முடியும் என்கிறது இந்த கணிப்பு. ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி, 14 லோக்சபா தொகுதிகளை வென்றுள்ளது. பாஜக கூட்டணி 6 தொகுதிகளும், காங்கிரஸ் 1 தொகுதியையும் வெல்லும் வாய்ப்புள்ளதாம்.

English summary
46 seats likely in BJP's kitty, Mahagathbandhan may get 30, Congress 4. Ruling TMC may get 28 out of 42 Lok Sabha seats in WestBengal if LokSabhaElections2019 are held today, 12 seats expected to go in BJPs kitty, while Left and Congress can be restricted to one each, say India TV opinion poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X